காது கருவி என்றால் என்ன?
February 8, 2021திருச்சியில் உள்ள காது கருவி மையங்கள்?
February 8, 2021
காது கேளாமைக்கான சிகிச்சை முறைகள் என்ன ?
ஸ்டெபி டெக்டமி அறுவை சிகிச்சை (Stapedectomy Surgery):
ஸ்டெபிடெக்டமி அறுவை சிகிச்சையின் மூலம் ஒடோஸ்கிளீரோசிஸ் என்ற
காது கேளாமை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம் .இந்த சிகிச்சையின் மூலம்
கேட்கும் திறனை உடனே திரும்ப பெறலாம் .இந்த அறுவை சிகிச்சையானது நுண்ணோக்கி
கருவி மூலமாக காதுக்குள்ளேயே மிக நுட்பமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையாகும்.இந்த அறுவை சிகிச்சையின் மூலம்
காதின் பின்புறம் போடப்படும் தையல் மற்றும் பிளாஸ்டர் போன்றவற்றை தவிர்க்கலாம்.
காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை (Cochlear implant surgery):
காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சையின் மூலம் பிறவிச் செவிடு அல்லது ஒன்று முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு
காக்ளியர் இம்பிளான்ட் எனும் கருவியை அறுவைசிகிச்சையின் மூலம்
காதில் பொருத்துவதன் மூலமும் ,தொடர் பேச்சுப்பயிற்சி கொடுப்பதன் மூலமும் , காது கேட்கும் திறனை அதிகரிக்கலாம். பிறந்த குழந்தைகளுக்கு நரம்பானது ,மூளைக்கட்டி சிகிச்சையின் போது பாதித்தால்,அதனை
நவீன காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சையின் மூலம் சரிசெய்து விடலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.