Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    causes-of-deafness-in-child
    குழந்தைகளுக்கு ஏற்படும் காது கேளாமைக்கான காரணங்கள் ?
    February 9, 2021
    guidlines-for-protect-ear
    காதை(செவியை) பராமரிப்பதற்கான சிறந்த வழிமுறைகள் என்னென்ன ?
    February 9, 2021

    காது கேளாமையை கண்டறிவதற்கான பரிசோதனைகள் என்னென்ன ?

    1 .காது கேளாமையை கண்டறிவதற்க்காக சில அடிப்படை பரிசோதனைகள் உள்ளன .ஆடியோகிராம் மற்றும் இம்பெடன்ஸ் ஆடியோமெட்ரி போன்ற பரிசோதனைகள் காது கேளாமையின் விகிதத்தை மதிப்பீடு செய்ய பயன்படுகிறது.

    ஆடியோகிராம் (Audiogram)

    ஆடியோகிராம் பரிசோதனையின் மூலம் நம் காது எந்த அளவிற்கு கேட்கும் தன்மையை இழந்துள்ளது என்பதை கண்டறிய முடியும் .காது இரைச்சல் உள்ளவர்கள் ஆடியோகிராம் பரிசோதனையை மேற்கொண்டு அதற்கான சிகிச்சைமுறை எடுத்தல் அவசியமாகும் .

    இம்பெடன்ஸ் ஆடியோமெட்ரி: (Impedance Audiometry)

    இம்பெடன்ஸ் ஆடியோமெட்ரி கருவியை பயன்படுத்தி நம் செவிப்பறைச் சவ்வின் அசைவு மற்றும் நடுக்காதின் அழுத்தம் போன்றவற்றை கண்டறியலாம் .
    2 .காது கேளாமையை மிகத் துல்லியமாக கண்டறிய பெரா (BERA - Brain stem Evoked Response Audimetry) என்ற நவீன சிகிச்சைமுறை பயன்படுத்தப்படுகிறது .பெரா பரிசோதனையானது மின் அதிர்வுகளை ஏற்படுத்தி கண்டுபிடிக்கும் சோதனையாகும் .காது கேளாமையை மதிப்பீடு செய்ய முடியாத நிலையில் ,பெரா பரிசோதனையை பயன்படுத்தி முழு தீர்வைக் காணலாம் .
    3 .காது கேளாமையின் குறைபாடுகளின் தரத்தை பொறுத்து ஆடியோ பரிசோதனை, இசைக்கவை பரிசோதனை, பேசி புரிந்து கொள்ளும் பரிசோதனை, ஒ.எ.இ (Oto Acoustic Emissions)டெஸ்ட் மற்றும் பெரா டெஸ்ட்(BERA) ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு தகுந்த சிகிச்சைகளை அளிக்கலாம் .
    4 .காது கேளாமையானது எந்த மாதிரியான பாதிப்பு மற்றும் அதன் பாதிப்பின் தீவிரம் என்ன என்பதை ஒடோஸ்கோப்(Otoscopy) என்ற கருவி மூலம் மிகத் துல்லியமாக அறியலாம் .