Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    guidlines-for-protect-ear
    காதை(செவியை) பராமரிப்பதற்கான சிறந்த வழிமுறைகள் என்னென்ன ?
    February 9, 2021
    causes-of-ear-absecess
    காதில் சீழ் வடிவதற்கான காரணங்கள் ?
    February 10, 2021

    காது கருவியை யார் பயன்படுத்தலாம் மற்றும் காது கருவியின் முக்கியத்துவம் ?

    காது கருவியின் முக்கியத்துவம் :

    காது கருவியானது கேட்கும் திறனை சற்று கூடுதலாக்க உதவும் ஒரு சாதனமாகும் .காது கருவியானது ஒரு மருத்துவம் அல்ல ,அது ஒரு கருவி மட்டுமே . இந்த காது கருவியானது காதிற்கு வெளியில் ஏற்படும் சத்தங்களை அல்லது ஒலியை சற்று கூடுதலாக்கி காதிற்கு உள்ளே அனுப்பும் ஒரு கருவி ஆகும் .

    காது கருவியை யார் பயன்படுத்தலாம் ?

    காது கேளாமை பிரச்சனைக்கு இரு வேறு காரணங்கள் உள்ளன .ஒன்று வெளிக்காது பிரச்சனை ,அதாவது ஒலி அலைகள் காதிற்குள் செல்வதில் ஏற்படும் தடைகள் .மற்றொன்று உட்காது பிரச்சனை ,அதாவது ஒலி மின்னலைகள் மூளைக்குள் சென்றடைவதில் ஏற்படும் சிக்கல்கள் . காது கருவியை குறிப்பாக வெளிக்காது கோளாறு உள்ளவர்கள் பயன்படுத்தலாம் .ஒலி அலைகள் காதிற்குள் செல்வதில் ஏற்படும் தடைகளை தகர்த்தெறிவதற்கு காது கருவி (Hearing aid ) கருவியை பயன்படுத்தலாம் . ஆனால் உட்காதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளான ,காது நரம்பு அல்லது காக்லியா செயல்படுவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே தீர்வை காணலாம் .இதற்கு "ஹெரிங் எயிட்" எனும் காது கருவி பயன்படுவதில்லை.