Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
causes-of-ear-absecess
காதில் சீழ் வடிவதற்கான காரணங்கள் ?
February 10, 2021
குறைந்த விலையில் காது கருவி கிடைக்கக்கூடிய இடங்கள் ?
February 10, 2021

காதில் பட்ஸ்(Buds) உபயோகப்படுத்தலாமா?

பொதுவாக நாம் அனைவரும் காதில் உள்ள அழுக்கை நீக்குவதாக என்று நினைத்து ,கையில் கிடைக்கும் தீக்குச்சி ,பைக் சாவி ,ஊக்கு ,பென்சில் போன்ற பொருட்களை கொண்டு காது குடைவதை ஒரு வழக்கமாகவே வைத்து வருகிறோம் .இதை முற்றிலுமாக அனைவரும் தவிர்க்க வேண்டும் .இல்லையென்றால் இது பெரும் பாதிப்பிற்கு வழி வகுக்கும் .

மேலும் ,கூர்மையான பொருளை கொண்டு காதை குடைவதால் ,காதில் உள்ள அழுக்கானது வெளியேறாது .மாறாக ,அழுக்கானது மேலும் உள்ளே சென்று செவிப்பறையை பாதிக்கும் .செவிப்பறைகள் பாதிப்படுவதாலோ ,அல்லது செவிப்பறை கிழிவதாலோ பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது .இதனால் காது வலி,காது புண் ,காதில் வீக்கம் ,காது கேட்காமல் போவது போன்ற காது பிரச்சனைகள் ஏற்படும் .பட்ஸ்(buds) கொண்டு காதை சுத்தம் செய்வதன் மூலம் ,காதின் உட்புறத்தில் உள்ள மெல்லிய சவ்வு பாதிப்பு அடைகிறது.

இயற்கையாகவே நம் காதுகளில் அழுக்கு சேர்வதும் ,பின்பு அது தானாகவே காய்ந்து வெளியேறுவதும் காதுக்குள் இருக்கும் ஒரு திறன் ஆகும் .ஆனால் நம் பட்ஸ்(buds) கொண்டு காதை குடைவதன் மூலம் காதுக்குள் அழுக்கு வெளியேறும் திறன் ஆனது முற்றிலும் அழிந்து விடும் ,இதன் விளைவாக மேலும் அழுக்குகள் காதுக்குள் கூடிக்கொண்டே போகும் .இறுதியில் இது காது கேளாமைக்கு ஒரு காரணமாக அமைந்துவிடும் .இதனால் பட்ஸ்(buds) கொண்டு காது குடைவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் .