Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    swimmer's-ear
    நீந்துவோர் காது நோய்(Otitis Externa) என்றால் என்ன ?
    February 12, 2021
    சென்னையில் உள்ள காது கருவி மையங்கள்?
    February 12, 2021

    காது கருவி எவ்வாறு செயல்படுகிறது ?


    • காது கருவியானது வெளிக்கருவி, உட்கருவி என இரண்டு வகையாக உள்ளது
    • காதுக்குப் பின்புறம் வெளியில் தெரிவதுபோல் பொருத்தப்படுவது வெளிக்கருவி ஆகும் . காது வெளிக்கருவியில் நுண் ஒலிவாங்கி (மைக்ரோபோன்), ஒலிபெருக்கி, ஒலியை உள்ளே அனுப்பும் அமைப்பு, மின்கலன் ஆகியவை உள்ளன.
    • காதிற்கு வெளியில் ஏற்படும் சத்தத்தை ,நுண் ஒலிவாங்கியானது பெற்று அந்த ஒலியை கிரகிக்கிறது . பின்னர் ஒலிபெருக்கி ஒலியின் அதிர்வுகளை அதிகப்படுத்தி, அதனை டிஜிட்டல் குறிகைகளாக மாற்றுகிறது.
    • இந்த டிஜிட்டல் குறிகைகள் ஓர் அலைபரப்புக் கருவியின் வழியாக காதின் உட்கருவிக்கு அனுப்பிவைக்கிறது.
    • காது உட்கருவியில் ஒலிவாங்கி, ஸ்டிமுலேட்டர் (Stimulater), காந்தம் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த காது உட்கருவியை அறுவை சிகிச்சையினால் காதின் பின்புறம் தோலுக்கு அடியில் பொருத்தி, அதனை தையல் போட்டு மூடிவிடுகின்றனர் .
    • காது உட்கருவியில் கம்பிபோல் இருக்கும் ஸ்டுமுலேட்டர் ஆனது உட்காதில் உள்ள நத்தை எலும்பில் (Cochlea) பொருத்தப்படுகிறது.பின்னர் அலைபரப்பி மூலம் வரும் ஒலிகளை, ஒலிவாங்கி கவர்ந்து ஸ்டுமுலேட்டருக்கு அனுப்பிவைக்கிறது.
    • பின்னர் ஸ்டுமுலேட்டரானது டிஜிட்டல் குறிகைகளை மின்குறிகைகளாக மாற்றி, செவி நரம்பு வழியாக மூளைக்கு அனுப்புகிறது. அங்கே ஒலிகள் பகுக்கப்பட்டு கேட்கும் திறன் செயலுக்கு வருகிறது.