சென்னையில் உள்ள காது கருவி மையங்கள்?
February 12, 2021காதை குடையலாமா ?
February 16, 2021
செவித் திறன் இழப்பின் அளவு(தீவிரத் தன்மை) முறைகள் ?
செவித் திறன் இழப்பில்
சாதாரண இழப்பு முதல் தீவிரமான இழப்பு என பல வகைகள் உள்ளன .பேச்சு திறனுக்கும் மற்றும் பேசும் மொழியின் வளர்ச்சிக்கும் காது
கேட்கும் திறனானது மிக இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது .
பொதுவாக
பிறந்த குழந்தைகளுக்கு கேட்கும் திறனை கண்டறிய SWIS-H போன்ற பல்வேறு சோதனைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன .ஆரம்ப நிலையிலேயே குழந்தைகளுக்கு கேட்கும் திறனின் அளவானது கண்டறியப்பட்டால் ,அவற்றிற்கு தகுந்த சிகிச்சை அளித்து ,குழந்தையின் பேச்சு திறனையும் ,மொழி வளர்ச்சியையும் பாதுகாத்தல் அவசியமாகும் .
செவித்திறனின் தன்மையானது டெசிபல் என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது .செவித் திறன் இழப்பின் அளவை அவற்றின் கேட்கும் திறனுக்கு ஏற்ப வகைப்படுத்தலாம் .
மனித செவிப்புலன் அளவானது Hz என்ற
அதிர்வெண்ணால் குறிப்பிடப்படுகிறது .மனித செவிப்புலனைன் நிறைவானது 20 முதல் 20,000 Hz இருத்தல் அவசியமாகும் .
1 .மிதமான செவித் திறன் இழப்பு :(21 - 45 dB)
மிதமான செவித் திறன் இழப்பு
குழந்தைகளுக்கு ஏற்படுமானால் ,அவர்களுக்கு கேட்கும் திறனில் சற்று தொய்வு ஏற்படலாம் .அதாவது குடும்ப உறவினர்களின் குழுமத்திலோ அல்லது விளையாட்டு இடத்திலோ
காது கேட்பது சற்று கடினமாக இருக்கும் .எனினும் அமைதியான சூழ்நிலைகளில் அவர்களால் நன்றாக செயல்பட முடியும் .
2 .சுமாரான செவித் திறன் இழப்பு :(46 - 65 dB)
இந்த வகையான செவித் திறன் இழப்பினால் பாதிக்கப்படும்
குழந்தைகள் ,மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்துகொள்வதில் ஏற்படும் சிரமங்கள் .சத்தமான சூழ்நிலைகளில் இது பெரிதும் மன உளைச்சலை உண்டாக்கும்.சுமாரான செவித் திறன் இழப்பிற்கு குழந்தைகள் ,செவி மடிப்புக் கருவிகளை பயன்படுத்தலாம் .இதனை பயன்படுத்த தவறினால் குழந்தையின் பேச்சு திறனில் பாதிப்பு ஏற்படும் .
3 .தீவிர செவித் திறன் இழப்பு(66 - 90dB) :
தீவிர செவித் திறன் இழப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்,பொது இடங்கள் மற்றும் குடும்பத்தில் நடக்கும் உரையாடல்களை கூட அவர்களால் கேட்க முடியாது .இதனால் குழந்தைகள் தாமாகவே பேசும் திறனை வளர்த்துக்கொள்ளமாட்டார்கள் .இந்நிலையில் இவர்களுக்கு காதுகருவியின் உதவிகளும் ,மற்றும் இதர உதவிகளும் தேவைப்படும் சூழல் உண்டாகும் . 4 .ஆழ்ந்த செவித் திறன் இழப்பு (+90dB):
ஆழ்ந்த செவித் திறன் இழப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ,மற்றவர்கள் பேசுவதைக் கூட அவர்களால் கேட்க முடியாது .மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளில் ஏற்படும் சத்தத்தையும் அவர்களால் கேட்க முடியாது .இந்நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு (cochlear Implant )
காக்லியா ஒரு தீர்வாக அமையும் .ஆழ்ந்த செவித் திறன் பாதித்த குழ்நதைகள் சாதாரண முறையில் தாமாகவே பேச்சு திறனையும் ,மொழித் திறனையும் வளர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும் .