Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    insect-in-ear
    காதுக்குள் பூச்சி நுழைந்துவிட்டால் என்ன செய்வது ?
    February 19, 2021
    hearing-loss-in-oneside-ear
    ஒரு பக்க நிரந்தர செவித் திறன் இழப்பு என்பது என்ன ?
    February 19, 2021

    இடைச்செவி அழற்சி என்றால் என்ன ?அதன் அறிகுறிகள் ?

    இடைச்செவி அழற்சி :

    இடைச்செவி அழற்சி என்பது நடுச்செவியில் ஏற்படுவது . இது பரவலாக குழந்தைப்பருவத்தில் ஏற்படுவதாகும் .நடுச் செவியில் ஏற்படும் தொற்று மற்றும் நுண்ணுயிர்கொல்லிகளின் தாக்கம் ஆகியவை மிகுந்த காது வலியை ஏற்படுத்தும்.நடுச் செவியின் அழற்சியானது ,6 முதல் 18 மாத குழந்தைகளுக்கு அதிகமாக காணப்படும்.

    இடைக்காது அழற்சி ஆனது தொண்டைக்-காது இணைப்புக் குழாயில் பாக்டீரியா அல்லது வைரசால் தொற்று உண்டாகும்போது ஏற்படுகிறது.

    இடைச்செவி அழற்சியின் அறிகுறிகள்?

    1 .இடைச்செவி அழற்சியின் காரணமாக சற்றே காதுகேளாமை ஏற்படும்.
    2 .காதுவலி
    3 .அதிகக் காய்ச்சல்: 38°C (100.4°F)
    4 .உடலில் ஆற்றல் குறைதல்
    5 .இடைச்செவி அழற்சியின் காரணமாக பெரும்பாலும் மூக்கு ஒழுகுதலும் , இருமலும் ஏற்படும் .

    இடைச்செவி அழற்சியால் உண்டாகும் பாதிப்புகள் ?

    1 .இடைச்செவி அழற்சியின் பாதிப்பால் ஓர் அசாதாரண தோல் கட்டியானது உண்டாகும் .இதனை கழிவுக்கொழுப்புருண்டை எனலாம் .
    2 .இடைச்செவி அழற்சியால் தொற்று பரவி காதுக்கடியில் இருக்கும் பொட்டெலும்புக் கூம்பு பாதிப்படைகிறது .
    3 .இடைக்காது அழற்சியின் காரணமாக மூளையையும், தண்டுவடத்தையும் இணைக்கும் மேலுறைக்குத் தொற்று பரவி அபாயகரமான மூளைக்காய்ச்சலை உண்டாக்கும்.
    4 .இடைக்காது அழற்சியின் மற்றுமொரு ஆபத்தான பாதிப்பு மூளைக்கட்டி .சீழ் நிரம்பிய கட்டி மூளைக்குள் உருவாவதே இதன் காரணம் .இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது மற்றும் அறிய சிக்கலான பாதிப்பாகும் .