Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171
hearing-loss-in-oneside-ear
ஒரு பக்க நிரந்தர செவித் திறன் இழப்பு என்பது என்ன ?
February 19, 2021
மனிதனின் காது கேட்கும் திறனின் அளவு ?
February 20, 2021

காதுகேட்கும் திறன் இழப்பு மற்றும் அவற்றிற்கான காரணங்கள்?

காது கேட்கும் திறனில் ஏற்படும் இழப்பானது இருவேறு காரணங்களால் ஏற்படுகிறது .1 .பிறவியில் ஏற்படும் இழப்பு (அதாவது குழந்தை பிறப்பதற்கு முன் அல்லது பிறப்புக்கு பின் ஏற்படுவது) 2 .பிற காரணங்களால் ஏற்படும் இழப்பு(வளரும் நிலைகளில் ஏற்படும் இழப்பு ).

காதுகேட்கும் திறன் இழப்பு குழந்தைப் பருவத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படுகிறது.அவை குடற்புழுக்கள், தட்டம்மை, ரூபெல்லா, மெனிசிடிடிஸ், சைட்டோமெலகோவைரஸ் தொற்றுகள் மற்றும் நாள்பட்ட ஓடிடிஸ் மீடியா போன்ற தொற்றுகள் கேட்கும் திறன் இழப்பிற்கு காரணமாக அமைகிறது.

பிறவியிலேயே ஏற்படும் இழப்பிற்கான காரணங்கள்:

1 .கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் நோய்கள் (ருபெல்லா, சிபிலிசு) காதுகேட்கும் திறன் இழப்பிற்கு காரணமாக அமைகிறது.
2 .தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது, பிரசவத்தின் விளைவாக ஏற்படும் தொற்றுகள் மற்றும் அதனால் உண்டாகும் சில சிக்கலான விளைவுகள் கேட்கும் திறனைப் பாதிக்கலாம்.
3 .குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு கேட்கும் திறன் பாதிப்படையலாம் .
4 .குழந்தை பிறக்கும் போது ஏற்படுகின்ற மூச்சுத்திணறல் .
5 .கர்ப்பகாலத்தில் தாய் உட்கொள்ளக்கூடிய சில மருந்துபி பொருட்கள் (அமினோகிளோக்சைடுகள், சைட்டோடாக்ஸிக் மருந்துகள், மலேரியாவுக்கான மருந்துகள் மற்றும் டையூரியிக்ஸ்) போன்றவைகளால் பிறவியிலேயே கேள்விகுறைபாடு ஏற்படும்.

பிற காரணங்களால் ஏற்படும் இழப்பு:

1 .அதிக சத்தங்களை கேட்பது, நீண்ட நேரம் ஆடியோ சாதனங்களைப் பயன்படுத்துதல்.
2 .இயந்திரங்களின் சத்தம் மற்றும் தொழிற்சாலையில் ஏற்படும் அதிகமான சத்தம்.
3 .வயது முதிர்வில் செவித்திறனுக்குரிய உயிரணுக்கள் அழிவது, குறிப்பாக காதிலுள்ள மெழுகின் செயல்தன்மை குறைவது.
4 .நீண்ட நாட்களாக காதில் ஏற்படும் தொற்றுகள்.
5 .காதுகளில் நீர் மற்றும் திரவம் சேர்வது (ஓரிடிஸ், மீடியா).
6 .தலையில் அல்லது காதுகளில் ஏற்படுகின்ற காயங்கள்.
7 .சிறு வயதில் ஏற்படுகின்ற மூளைக்காய்ச்சல், தட்டம்மை போன்ற நோய்களாலும் செவித் திறன் இழப்பு ஏற்படுகிறது .