Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
causes-of-hearing-loss
காதுகேட்கும் திறன் இழப்பு மற்றும் அவற்றிற்கான காரணங்கள்?
February 20, 2021
symbol-of-deafness
செவிட்டுத் தன்மை (கேள்விக் குறைபாடு) என்றால் என்ன? அவற்றின் பாதிப்புகள் ?
February 20, 2021

மனிதனின் காது கேட்கும் திறனின் அளவு ?

மனிதனின் காது கேட்கும் திறனின் அளவானது அதிர்வெண்ணின் அடிப்படையில் 20 முதல் 20000 ஹெட்ர்ஸ் ஆகும் .

பொதுவாக நம் காதிற்குள் விழும் ஒலிஅலைகள்,நம் செவிப்பறையில் விழுந்து, நடுக்காது பகுதிக்குள் செல்லும். பின்னர் அங்குள்ள மூன்று எலும்புகளில் எதிரொலித்து உள் காது பகுதிக்குச் செல்லும்.உள்காதில் உள்ள காக்ளியா என்ற இடத்தில் ஒலி அலைகள் ,மின்காந்த அலையாக மாறி நரம்பு வழியாக மூளை பகுதிக்குச் செல்லும். இதன் காரணமாகவே மனிதர்கள் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.
மனிதன் காதால் கேட்கக்கூடிய ஒலியை அதிர்வெண்ணின் அடிப்படையில் மூன்று வகையை நாம் பிரிக்கலாம் . அவை 1 .கேட்பொலி 2 .குற்றொலி 3 .மீயொலி ..

கேட்பொலி:

கேட்பொலி என்பது 20 முதல் 20000 வரையிலான அதிர்வெண்களைக் கொண்ட ஒலியினை நாம் கேட்பொலி என்கிறோம் .இந்த ஒலிகளை மனிதர்களால் மட்டுமே கேட்க முடியும் .மனிதனின் செவியால் உணரக்கூடிய ஒலிகளை செவியுணர் மற்றும் செவியுணரா ஒலிகள் என இரு வகையாக பிரிக்கலாம்.

செவியுணர் ஒலிகள்:
மனிதனின் செவியால் 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வெண்களை உடைய ஒலி அலைகளை மட்டுமே கேட்கமுடியும் .இதனையே நாம் செவி உணர் ஒலிகள் என்கிறோம்.

செவியுணரா ஒலிகள்:
ஒலி அலைகளின் அதிர்வெண்ணானது 20 ஹெர்ட்ஸ்க்கு கீழே குறைந்தாலோ , 20000 ஹெர்ட்ஸ்க்கு அதிகமானாலோ அந்த ஒலிகளை நம் காதுகளால் கேட்க முடியாது.இதனையே செவி உணரா ஒலிகள் என்கிறோம்.

குற்றொலி:


20 ஹெர்ட்சுக்கும் குறைவான ஒலிகளையே குற்றொலி அல்லது இன்போசோனிக் ஒலி என அழைக்கிறோம் .இந்த ஒலிகளை மனிதர்களால் கேட்க முடியாது .

மீயொலி :

20000 ஹென்டர்ஸுக்கும் அதிகமான ஒலிகளையே நம் மீயொலி என்கிறோம் .இத ஒலிகளை டால்பின்கள் ,நாய்கள் போன்ற விலங்குகளால் மட்டுமே கேட்க முடிகிறது.

ஒருவரின் காதால் கேட்க முடிந்த மிகக் குறைந்த ஒலியை 0 டெசிபல் என்று கூறுவார்கள்.ஒலியை அளக்கப் பயன்படும் அலகு டெசிபல் (Desibel). ஒரு டெசிபல் என்பது 0.000000000001 W/m2 .

பொதுவாக 80 டெசிபல் வரை உள்ள சத்தத்தை கேட்பது என்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தாது .அதற்கும் மேலாக ,அதாவது 90 டெசிபல் சத்தத்தை எட்டு மணி நேரத்துக்குக் தொடர்ந்து கேட்கிறோம் என்றால், நம் காதானது கட்டாயம் பெரும் ஆபத்திற்கு உள்ளாகும்.இது நாளடைவில் நிரந்தர காது கேளாமைக்கு வழி வகுக்கும்.