Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
cochlear-implant-external-in-ear
காக்ளியர் உள்வைப்பு (Cochlear implant) செயல்படும் விதம் ?
March 1, 2021
காது கேட்கும் கருவி விற்பனை செய்யப்படும் இடங்கள் ?
March 1, 2021

கடத்தும் செவிப்புலன் இழப்பு மற்றும் அவற்றிற்கான கரணங்கள் ?

பொதுவாக செவிப்புலன் இழப்பானது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது .மரபியல் அல்லது பரம்பரை , அதிக சத்தத்தின் வெளிப்பாடு, சில நோய்த்தொற்றுகள், பிறப்பு சிக்கல்கள்(கோளாறுகள்), காதுக்கு ஏற்படும் அதிர்ச்சி மற்றும் சில மருந்துகள் அல்லது நச்சுகள்.

இதில் கடத்தும் செவிப்புலன் இழப்பானது வெளிப்புற மற்றும் நடுத்தர காது வழியாக ,உட்காதிற்கு ஒலிகள் செல்ல முடியாதபோது இந்த இழப்பானது ஏற்படுகிறது. இவற்றின் மூலம் மென்மையான ஒலிகளைக் கேட்பதில் அதிக சிரமம் ஏற்படும் .

கடத்தும் செவிப்புலன் இழப்பிற்கான காரணங்கள் :

*சளி அல்லது ஒவ்வாமையின் காரணமாக நடுப்பகுதி காதிலிருந்து திரவம் வெளியேறுதல் .
*காதில் ஏற்படும் நோய்த் தொற்று அல்லது ஓடிடிஸ் மீடியா. ஓடிடிஸ் என்பது காதின் நோய்த்தொற்றைக் குறிக்கும் ,மேலும் மீடியா என்பது நடுப்பகுதி என்பது பொருள்.
*காது கால்வாயில் ஏற்படும் தொற்று, வெளிப்புற ஓடிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.
*வெளிப்புற காதில் அந்நிய பொருட்களை நுழைத்தல் மற்றும் காதில் ஏற்படும் துளை.
*வெளி அல்லது நடுப்பகுதி காதில் ஏற்படும் சிக்கல்கள்.அதாவது , சிலர் வெளிப்புற காது இல்லாமல் பிறப்பது,மற்றும் சிலருக்கு சிதைந்த காது கால்வாய் இருப்பது.
*நடுப்பகுதி காதில் உள்ள எலும்புகளில் ஏற்படும் சிக்கல் .
*யூஸ்டாச்சியன் குழாயில் ஏற்படும் மோசமான பாதிப்புகள் . (யூஸ்டாச்சியன் குழாயானது நடுத்தர காது மற்றும் மூக்கை இணைக்கும் ஒரு குழாய். யூஸ்டாச்சியன் குழாயானது நடுத்தரக் காதில் உள்ள திரவத்தை வெளியேற்ற உதவுகிறது.)
*உட்காந்து பகுதியில் ஏற்படும் தீங்கற்ற கட்டிகள்,இந்த கட்டிகள் புற்றுநோய் கட்டிகள் அல்ல, ஆனால் வெளி அல்லது நடுக்காதை பாதிக்கும் தன்மை கொண்டது .
*காது கால்வாயில் சிக்கியுள்ள செருமென் அல்லது அழுக்கு .