1.காது கேட்கும் கருவிகள் மற்றவர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ள உதவுகின்றன. ஆரோக்கியமான உறவைப் பேணுவதற்கும் மேலும் திறம்பட செயல்படுவதற்கும் காது கருவிகள் பயன்படுகின்றன.
2.மிகவும் அமைதியாகப் பேசுவதை கேட்பது அல்லது அவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது ,உரையாடல்களிலிருந்து விலகி இருப்பது அல்லது உரையாடல்களிலிருந்து விளக்கி வைப்பது போன்ற காரணிகள் அனைத்தும் மன ஆரோக்கியத்தை பாதித்து
காது கேளாமைக்கு வழி வகுக்கும் .இது போன்ற சிக்கல்களை தடுப்பதற்கு
காது கேட்கும் கருவிகள் பெரிதும் பயன்படுகின்றன.
3.கேட்கும் கருவிகள் உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பை மேம்படுத்த உதவுகிறது .கேட்கும் திறன் மேம்பட்டால் உங்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் மேம்படும்.எடுத்துக்காட்டாக , வாகனத்திலிருந்து வரும் ஒலியை கேட்பது...
4.கேட்கும் கருவிகள் சமூக சூழ்நிலைகளில் பங்கேற்க ஏதுவாக அமைகிறது .அதாவது, காது கேளாமை லேசானதாக இருந்தாலும் அல்லது கடுமையானதாக இருந்தாலும், அது சமூக சூழ்நிலைகளில் பங்குபெறுவதை தடுக்கிறது .இதனை நிவர்த்தி செய்வதற்காக காது கருவிகள் உறுதுணையாக இருக்கின்றன.
5.காது கருவிகள் உங்களின் தொழில் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது. காது கேளாமையின் காரணமாக ஒருவரின் திசைகளை தவறாகப் புரிந்துகொள்வது அல்லது வாடிக்கையாளர் சேவையை போதுமான அளவில் வழங்க முடியாத நிலை போன்ற காரணிகள் உங்கள் வருமானத்தை பாதிப்பதோடு ,வாழ்க்கையையும் பாதிக்கிறது .காது கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் இதுபோன்ற சிக்கல்களை எளிதில் கையாளலாம்.