Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
அரியலூருக்கு அருகில் உள்ள காது கருவி நிலையம் எது?
March 19, 2021
அறந்தாங்கி அருகில் உள்ள காது கருவி நிலையம் எது?
March 20, 2021

செவித்திறன் எதனால் குறைகிறது ?

செவித்திறன் குறைபாடு என்பது ஒரு காது அல்லது இரு காதிலும் கேட்கும் திறனில் ஏற்படும் மாறுபாடு ஆகும்.செவித்திறன் இழப்பு என்பது லேசான ,மிதமான தீவிரமான செவித்திறன் இழப்பு என வகைப்படுத்தலாம்.

நம் செவியானது கேட்கும் பணியை செய்வதோடு மட்டுமல்லாமல், உடலின் சமநிலை மாறுபடும்போது அதனை சீராக வைப்பதற்கும் செவியானது பயன்படுகிறது. குறிப்பாக சொல்வதென்றால், நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடப்பதற்கும் காதுகள் மிக அவசியமாகிறது.

பொதுவாக நடுக்காதுக்கும், மூக்குக்கும் இடையே ஒரு துளை இருக்கும். அதன்வழியே கிருமிகள் எளிதாக நடுக்காதை சென்றடைந்து விடும். அந்தக்கிருமிகள் நடுக்காதில் உள்ள செவிப்பறையை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கேட்கும் திறன் குறையும். இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கு அதிகம் வரும்.

பெரியவர்களை பொறுத்தவரை, அடிக்கடி சளிப்பிடித்தல், மூக்கு தண்டு வளைதல், மூக்கில் கட்டி, சைனஸ் தொந்தரவு, பிற கட்டிகள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் கேட்கும் திறன் பாதிக்கும். காது வலியுடன் சீழ் வடியும், சிலருக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு முகவாதம் வரலாம். கண் இமைகள் மூடாமல் போகும் வாய்ப்பும் உள்ளது. அப்போதும் சரிவர கவனிக்காமல் போனால் மூளையில் சீழ் கட்டிகள் தோன்றலாம். அதனால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்படலாம்.

செவித்திறன் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்?

*செவிப்பகுதிக்குள் உள்ள மிக நுண்ணிய குழல்கள் நம் கேட்கும் ஒலியை வெளிப்புறத்திலிருந்து,நடுக்காது மற்றும் உட்காதிற்கு கடத்துவதற்கு உதவுகின்றன.மேலும் உட்காது முழுவதும் நரம்பு இழைகள் காணப்படுகின்றன.இவற்றில் ஏதேனும் நோய்த் தொற்று ஏற்பட்டால் செவித்திறன் குறைபாடு ஏற்படும்.

* காது-தொண்டை இணைப்புக் குழாயில் வரும் தொடர் சளி, நடு காதில் தங்கும் சளி போன்றவற்றை சரிவர பராமரிக்காமல் இருப்பதன் காரணமாகவும் செவித்திறன் குறைபாடு ஏற்படும்.

* பிறவியிலேயே வரும் `ஓட்டோஸ்கிளெரோசிஸ்’ (Otosclerosis) எனும் நோயால், சத்தம் கடத்தும் ஒலியில் அதிரவேண்டிய நுண்ணிய எலும்புகள் சரியாக அதிராமல் இருப்பதன் காரணமாக செவித்திறன் குறையும் அபாயம் உள்ளது.

*நாம் அதிகபட்ச ஒலியை அல்லது சத்தத்தை தொடர்ந்து கேட்பதனால் காதுக்குள் உள்ள ஸ்டீரியோசெல்லா எனும் மிக நுண்ணிய மயிரிழைகள் சிதைவடைவதன் காரணமாக செவித்திறன் குறைபாடு ஏற்படுகிறது.

*பேனா, பென்சில், குச்சி போன்ற கையில் கிடைத்ததை வைத்து காது குடைவதன் காரணமாக, செவிப்பறை பாதிப்படைவதால் கேட்கும் திறன் குறையும் நிலை ஏற்படுகிறது.

*முதுமையின் காரணமாக செவித்திறன் மெல்ல,மெல்ல குறைவது இயல்பான ஒன்றாகும்.