மனிதன் காதால் கேட்கக்கூடிய ஒலியை அதிர்வெண்ணின் அடிப்படையில் மூன்று வகையை நாம் பிரிக்கலாம் . அவை 1 .கேட்பொலி 2 .குற்றொலி 3 .மீயொலி ..
கேட்பொலி:
கேட்பொலி என்பது 20 முதல் 20000 வரையிலான அதிர்வெண்களைக் கொண்ட
ஒலியினை நாம் கேட்பொலி என்கிறோம் .இந்த ஒலிகளை மனிதர்களால் மட்டுமே கேட்க முடியும் .மனிதனின்
செவியால் உணரக்கூடிய ஒலிகளை செவியுணர் மற்றும் செவியுணரா ஒலிகள் என இரு வகையாக பிரிக்கலாம்.
செவியுணர் ஒலிகள்:
மனிதனின் செவியால் 20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வெண்களை உடைய ஒலி அலைகளை மட்டுமே கேட்கமுடியும் .இதனையே நாம் செவி உணர் ஒலிகள் என்கிறோம்.
செவியுணரா ஒலிகள்:
ஒலி அலைகளின் அதிர்வெண்ணானது 20 ஹெர்ட்ஸ்க்கு கீழே குறைந்தாலோ , 20000 ஹெர்ட்ஸ்க்கு அதிகமானாலோ அந்த ஒலிகளை நம்
காதுகளால் கேட்க முடியாது.இதனையே செவி உணரா ஒலிகள் என்கிறோம்.