காது மெஷின் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய இடங்கள் ?
March 3, 2021உயர் அதிர்வெண் கேட்கும் இழப்பு என்றால் என்ன ?
March 4, 2021
பிரஸ்பிகுசிஸ்(வயது தொடர்பான காது கேளாமை இழப்பு) என்றால் என்ன?
வயது தொடர்பான
காது கேளாமை இழப்பு என்பது பிரஸ்பிகுசிஸ் என்று அழைக்கப்படுகிறது .செவிப்புலன் இழப்புக்கு பல காரணங்கள் இருப்பினும் ,மிகவும் பொதுவான காரணமாக வயது தொடர்பான காது கேளாமை (பிரெஸ்பிகுசிஸ்) உள்ளது .
வயது தொடர்பான காது கேளாமை பொதுவாக நாம் வயதுமுதிர்வை அடையும் பொது உள்காதில் உள்ள முடி செல்கள் அழியத் தொடங்குகின்றன, மேலும் அதிக முடி செல்கள் அழிவதால் , நம் செவிப்புலனானது மோசமான நிலையை அடைந்து விடும் .எனவே வயது முதிர்வால்
காது கேளாமையானது ஏற்படுவதற்கு இதுவே ஒரு காரணமாகும் .இதில் 65 முதல் 75 வயதிற்குட்பட்டவர்களுள் பெரும்பாலானோர் காது கேளாமைக்கு ஆளாகிறார்கள் என்று ஆராய்ச்சி ஒன்று குறிப்பிடுகிறது.
வயது தொடர்பான காது கேளாமை இழப்புக்கு காரணம் ?
*வயது தொடர்பான செவித்திறன் இழப்பு பரம்பரை பரம்பரையாக ஏற்படக்கூடும் எனவும் ,சுற்றுச்சூழல் காரணிகளும் இதற்கு காரணமாக அமைகிறது எனவும் சில ஆய்வுகள் கூறுகிறது.
*உரத்த சத்தத்தை மீண்டும் மீண்டும் கேட்பதன் மூலம் வயது தொடர்பான
செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது .
*புகைபிடிப்பவர்களுக்கு வயது தொடர்பான
செவித்திறன் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
*இரத்த ஓட்டத்தின் தன்மையானது நம் செவிக்கு மிக முக்கியமானது, மேலும் இதர நோய்கள் மற்றும் மருந்துகள் நம் கேட்கும் திறனை பாதிக்கக்கூடும்.
வயது தொடர்பான காது கேளாமைக்கு முக்கிய காரணமாக இருப்பது முடி செல்கள் .இந்த முடி செல்கள் மிகவும் உணர்திறன் கொண்டவை.இது சேதமடைவதால் உட்புற
காதில் இருந்து மூளைக்கு
ஒலியை நகர்த்துவதில் சிக்கல் ஏற்படுகிறது .இதனால் காது கேளாமையானது ஏற்படுகிறது .
*காதுப் பகுதியில் காயம்
*மூளைக்காய்ச்சல்
*உரத்த சத்தம்
*தீங்கற்ற கட்டிகள்
*
மீனியர்ஸ் நோய்
*
நரம்பியல் பாதிப்புகள்