Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171
ITE-Hearing-aid
ஐடிஇ(ITE – In The Ear) வகை காது கருவிகள் ?
March 5, 2021
Digital-Hearing-aid
டிஜிட்டல் காது கருவிகள்(Digital Hearing aid) ?
March 6, 2021

அனலாக் காது கருவிகள்(Analog Hearing Aid)

அனலாக் காது கருவிகள் பல நாட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது . அனலாக் காது கருவிகள் இன்றளவும் அனைத்து இடங்களிலும் கிடைக்கப்பெறுகின்றன,மேலும் இவை பயனாளர்களுக்கு பல நன்மைகளை வழங்கி வருகிறது .இவை எல்லா ஒலிகளின் அளவையும் ஒரே தீவிரத்துடன் அதிகரிக்கின்றன.

அனலாக் காது கருவிகள் வெளிப்புறத்திலுள்ள ஒலியை கிரகித்து , அதனைப் பெருக்கி, அதே ஒலியை சத்தமாக உட்காது பகுதிக்கு அனுப்புகிறது .இது டிஜிட்டல் கருவியை காட்டிலும் ,அனைத்து ஒலிகளையும் சமமாக பெருக்கும் தன்மை கொண்டது .ஆனால் ஒரு சில கூற்றுகள் அனலாக் கருவிகளுக்கு எதிர்மறையாக உள்ளது ,அதாவது அனலாக் கருவிகள் ஒரு பழமையான தன்மையைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது , இவை இன்று நடைமுறையில் பயன்படுத்தப்படவில்லை எனவும் ,இவை ஒரு பெருக்கியின் கொள்கையில் செயல்படுகின்றன என பல்வேறு விவாதத்திற்கு உட்பட்டு இருக்கிறது .
பல அனலாக் காது கேட்கும் கருவிகள் இன்னும் நிரல்படுத்தக்கூடியவையாகவே உள்ளன . மேலும் இவை வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் சாதனமாகும் .

அனலாக் கருவியின் பிற நன்மைகள்:
*குறைந்த விலையில் கிடைக்கக்கூடியது .
*இது நீண்ட பேட்டரி ஆயுள் கொண்டது .
*எளிதான அமைப்பை கொண்டுள்ளது .