ஆடிட்டரி நியூரோபதி ஸ்பெக்ட்ரம் டிசார்டர் (ANSD) என்பது ஒரு வகையான
செவித்திறன் இழப்பு ஆகும் .இந்த வகை காது கோளாறுகள் பெரும்பாலும் 10 குழந்தைகளில் ஒரு
குழந்தைகளுக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது .
ANSD
செவித்திறன் கோளாறானது ,குறைந்த அளவு முதல் அதிக அளவு வரை
செவித்திறன் இழப்பை ஏற்படுத்தும் .காது செவிச் சுருள்வளை வரைக்கும்
ஒலி சென்று ,சுருள் வலையின் உட்புறமாக உள்ள உரோம உயிரணுக்களின் வழியாக மூளை வரைக்கும் ஒலி கடத்தப்படுவதில் ஏற்படும் கோளாறுகளை ANSD கோளாறு என்கிறோம் .
ANSD குறைபாடு உண்டாவதற்கான காரணங்கள் ?
1 .செவித்திறன்
நரம்பில் ஏற்பட்டுள்ள குறைவான வளர்ச்சி மற்றும் அதில் ஏற்பட்டுள்ள சிதைவு .
2 .
செவிப்புலன் உறுப்புகள் முதிர்ச்சி அடையாமல் இருப்பது .
3 .
காதின் சுருள் வளைக்குள் இருக்கும் உட்புற உரோம உயிரணுக்களில் ஏற்பட்டுள்ள சிதைவு .
4 .உட்புற ரோம உயிரணுக்களுக்கும் ,நரம்பிற்கும் இடையேயான இணைப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடு .