Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    ear-bone-types
    காதில் உள்ள எலும்பு அதிகமாக இருக்குமா?
    March 10, 2021
    புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள காது கருவி நிலையம் எது ?
    March 10, 2021

    காதைப் பராமரிப்பதன் மூலம் கேட்கும் திறன் இழப்பைத் தவிர்ப்பது எப்படி ?

    காது கேளாமை என்பது உடலில் வெளியில் தெரியாத ஒரு குறைபாடாகும்.ஒலியை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ உணர அல்லது புரிந்துகொள்ள முடியாதவர்கள் காது கேளாதவர் எனப்படுகின்றனர்.

    *காதின் உள்ளே செல்லும் குழாயில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும் மெழுகு போன்ற திரவம் கொண்டது .இவை காதிற்குள் தூசி, அழுக்கு செல்லாமல் பாதுகாக்கிறது.

    *காதின் நடுவில் மெல்லிய ஜவ்வு போன்ற தடுப்பு உள்ளது. இவை செவிப்பறையாகும். இதுதான் காற்றில் வரும் ஒலி அதிர்வுகளை வாங்கி உள்ளே அனுப்புகிறது.

    *நமது தாடை அசைவின்போது தானாகவே அழுக்குகளை வெளியேற்றும் திறன் காதுகளுக்கு உண்டு. அதனால் கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் காதில்விட்டுக் குடைந்து அழுக்குகளை நீக்க முயற்சி செய்யக் கூடாது.

    *காதில் தண்ணீர் புகுந்து அடைப்பு ஏற்பட்டால் காது மடல்களை லேசாக அசைப்பதன் மூலம் தண்ணீர் வெளியேறி அடைப்பு தொல்லையானது நீங்கும் .தேவைப்பட்டால் மெல்லிய பருத்து துணி மூலம் காதை சுத்தப்படுத்தலாம்.

    *காது கேட்கும் திறன் குறைந்து போவதை அறிந்தால், ஆரம்பத்திலேயே காது கருவியை பொருத்தி இயல்பான பேசும் திறன் பாழாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

    *காதுக்குள் பூச்சி ஏதேனும் புகுந்து விட்டால் உப்பு நீரைக் காதில் விடுவது நல்லது .இதுதான் உடனடி முதல் உதவியாகும்.தொடர்ந்து ஒலி எழும்பும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் காது அடைப்பான் அணிவது நல்லது.இதன் மூலம் காது கேட்கும் திறன் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம் .

    *நீண்ட நேரம் கைப்பேசியில் பேசுவதையும், ஓயாமல் இயர்போனில் (earphone) பாட்டுக்கேட்பதையும் தவிர்த்தல் நல்லது .இதன் மூலம் கேட்கும் இழப்பை தவிர்க்கலாம் .