நம் காதுகளில் நீண்ட நேரம் இயர்போன் அல்லது ஹெட்செட் பயன்படுத்துவதால், காதின் உட்புறத்தில் உள்ள மெல்லிய சவ்வுகள் மற்றும் நரம்புகள் பாதிக்கப்பட்டு,
கேட்கும் திறனானது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்குகிறது.
சிலர் அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்பது ,நீண்ட நேரமாக
ஒரு பக்க காதில் மட்டும் அலைபேசியை வைத்து பேசுவது போன்ற காரணங்களால் காதுகள் பாதிக்கப்பட்டு ,பின்னர் நிரந்தர
காது கேளாமையை ஏற்படுத்தும் .
நீண்ட நேரம் காதில் இயர்போன் அல்லது ஹெட்செட்ஐ பயன்படுத்துவதால் ,
1 .காதில் தொடர்
இரைச்சலானது கேட்கத் தொடங்கும்.
2 .நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்துவதால் தூரத்திலிருந்து வரும் சத்தம் கேட்காமல் போகும்.
3 .சில நேரங்களில் அருகில் எழும் சத்தம்கூடக் கேட்காமல் போகும் வாய்ப்புகள் உண்டு .
4 .
காதில் மந்தமான நிலை ஏற்பட்டு காது மரத்துப் போகும் நிலையானது ஏற்படும்.
ஒருமுறை நம்
காதின் கேட்கும் திறனானது குறைந்து விட்டால், மீண்டும் அதைப் பெறுவது என்பது ஒரு எளிதான காரியமல்ல.காது கேளாமை பாதிப்பு வந்தால்,அதனை முழுமையாக குணப்படுத்துவது என்பது ஒரு கடினமான செயலாகும் ,அதிலும்
நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் குணப்படுத்துவது மிகவும் கடினமான செயலாகும்.எனவே நம்
காதை முறையாக பேணி காப்பது அவசியமாகும்.