கும்பகோணத்தில் உள்ள சிறந்த காது கருவி மையம் எது ?
February 10, 2021காதில் ஏற்படும் மீனியர்ஸ் நோய் பாதிப்பு என்றால் என்ன ?
February 11, 2021
காது இரைச்சல்(Tinnitus) என்றால் என்ன? காது இரைச்சலுக்கான காரணங்கள் மற்றும் பாதிப்புகள் ?
காது இரைச்சல் :
ஒலிமாசு மற்றும் தொடர்ந்து அதிகளவு சத்தங்கள் கேட்பது, காது இரைச்சலுக்கு ஒரு காரணமாக அமைகிறது .மேலும் காதுக்குப்போகும் ரத்த ஓட்டம் குறைவது ,
காதில் சீழ் வடிவது மற்றும் காதில் அழுக்குப்படிவது ஆகியவை காது இரைச்சலுக்கு காரணமாக அமைகிறது .காது இரைச்சலின் போது
காதுக்குள் பூச்சி கத்துவது போலவோ அல்லது தொடர்ந்து ஒலி கேட்டுக்கொண்டிருப்பது போலவோ தோன்றும் .
காது இரைச்சலானது காதிலுள்ள எலும்புகள்,காதிலிருந்து மூளைக்கு செல்லும் காது நரம்பு மற்றும் மூளை ஆகியவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் காது இரைச்சல் ஏற்படும் .இந்த காது இரைச்சலானது ஒரு சிலருக்கு தொடர்ச்சியாகவும் ,சிலருக்கு விட்டு விட்டும் கேட்கக்கூடும்.
காது இரைச்சலுக்கு அறுவை சிகிச்சை ஒரு நல்ல தீர்வாக அமையும் .அறுவை சிகிச்சைக்கு உடல்நிலை பொருந்தாதவர்கள்
காது கருவியை பயன்படுத்தலாம், ஒலி மருத்துவம் (sound therapy) அல்லது மாஸ்கர் (Masker) எனும் கருவியை மருத்துவரின் ஆலோசனைப்படி காது இரைச்சலுக்கு பயன்படுத்தலாம்.
காது இரைச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் ?
காது இரைச்சல் ஏற்படுவதற்கு மருத்துவ ரீதியில் இரு காரணங்கள் கூறப்படுகின்றன .அவை தற்காலிகமான காது இரைச்சல் குறைபாடு ,நிரந்தர காது இரைச்சல் .
நிரந்தர காது இரைச்சல் ஆனது முதுமை அடைந்தவர்களுக்கு வயது முதிர்வின் காரணமாக நடுக்காது எலும்புகள்,
நத்தை எலும்பு (காக்லியா ) மற்றும் காதின் நரம்பிழைகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் காது இரைச்சல் ஏற்படுகிறது . ஆனால் தற்காலிக காது இரைச்சல் ஆனது வெளிப்பொருட்களால் காதில் ஏற்படும் அடைப்பு,காளான் தொற்று ஆகியவை தற்காலிக காது இரைச்சலை உருவாக்கும்.இதனை முறையான சிகிச்சை முறையில் விரைவில் குணப்படுத்தி விடலாம் .
காது இரைச்சலானது குறிப்பாக ‘எலும்பு முடக்கம்’ (Otosclerosis) எனும் நோய் தாக்கும்போது ஏற்படுகிறது .இதனால் எலும்புகள் இறுகி, ஒலி அதிர்வுகள் காது நரம்புக்குச் செல்வது தடைபடும். இந்நிலையில்
காது மந்தமாவதோடு, இரைச்சலும் கேட்கும்.
காது இரைச்சலானது காது – மூக்கு -தொண்டைக்குழாய்(Eustachian tube) அழற்சி அடைவதாலோ அல்லது வீக்கம் அடைந்தாலோ காது இரைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது .
காது இரைச்சலால் ஏற்படும் பாதிப்புகள் ?
1. காது இரைச்சல் ஆனது மனக்குழப்பத்தை உண்டாகும் .
2.காது இரைச்சலால் நினைவாற்றல் குறையும் .
3.தூக்கமின்மை ,பணியில் கவனச் சிதறல் ஏற்படுதல் .
4. அமைதியான சூழலில் காதுக்குள் ரீங்காரம் ஒளிப்பதால் மனா அழுத்தம் உண்டாகும் .
காது இரைச்சலுக்கு ஆடியோகிராம்,HRCT ஸ்கேன் ,MRI ஸ்கேன் ,MRN ஸ்கேன் ,MRA ஸ்கேன் போன்ற
பரிசோதனைகள் மூலம் காது இரைச்சலுக்கு முழுத் தீர்வை காணலாம் .