Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    Hearing-loss-symptoms
    செவித்திறன் இழப்பு என்றால் என்ன ?மற்றும் அதன் அறிகுறிகள்?
    February 9, 2021
    audiogram-test-and-report-ear
    காது கேளாமையை கண்டறிவதற்கான பரிசோதனைகள் என்னென்ன ?
    February 9, 2021

    குழந்தைகளுக்கு ஏற்படும் காது கேளாமைக்கான காரணங்கள் ?

    பிறந்த குழந்தைகளுக்கு காதின் வழியே செல்லும் ஒலி,மூளையிலுள்ள செவிப்பகுதியை தூண்டிய பிறகே குழந்தைக்கு பேசும் திறன் வரும் .ஒருவேளை ,காதின் உள்ளே ஒலியானது செல்லவில்லையென்றால் அக்குழந்தையால் பேச முடியாது . குழந்தை பிறந்தவுடன் கே.ஏ.வி. என்ற நவீன கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட வேண்டும். இந்த பரிசோதனையானது குழந்தையின் செவித்திறனை அறிய உதவுகிறது .


    1 .குழந்தைகளுக்கு பிறவிலேயே ஏற்படும் காது கேளாமைக்கு மரபியல் குறைபாடு(பிறவிக்கோளாறுகள் ) அல்லது பரம்பரை குறைபாடுகள் ஒரு காரணமாகும் .
    2 .தாயின் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நோய்த் தொற்று மற்றும் தாய் உட்கொள்ளக்கூடிய சில மருந்துப் பொருட்களால் குழந்தைகளுக்கு காது கேளாமை ஏற்படவாய்ப்புள்ளது.
    3 . குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற மூளைக்காய்ச்சல்,அக்குழந்தையின் செவிப்புலனை பாதிக்கும் .
    4 .பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற ஆக்சிஜன் குறைபாடு குழந்தைகளின் செவிப்புலனை பாதிக்கும் .
    5 . குடும்பத்தில் கணவருக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தமாகவும், மனைவிக்கு ஆர்.ஹெச் நெகட்டிவ் ரத்தமாகவும், குழந்தைக்கு ஆர்.ஹெச் பாசிட்டிவ் ரத்தமாகவும் இருந்தால் அந்தக் குழந்தைக்குப் பிறவிச் செவிடு உண்டாகலாம் என கூறப்படுகிறது .