காதில் சீழ் வடிவதால் காது
கேட்கும் திறனானது குறையக்கூடும் .இந்த பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீர்வு காணாவிடில்,
காது கேளாமை ஏற்படும் அபாயம் உள்ளது .
காதில் சீழ் வடிவதற்கு முக்கிய காரணமாக இருப்பது சளி (ஜலதோஷம்) .மூக்கில் உள்ள சளியானது வீரியம் அடைவதற்கு முன் அதற்கு தகுந்த சிகிச்சை எடுப்பது நல்லது ,இல்லையென்றால் சளியில் உள்ள கிருமிகள் ஈஸ்டாக்கியன் குழல் (தொண்டையும் நடுக்காதையும் இணைக்கும் பகுதி ) வழியாக சென்று காதில் சீழ் வைக்கும் ,பின்னர் அங்குள்ள செவிப்பறையைக்கிழித்து சீழானது
வெளிக்காது வழியாக வெளியேறும் . இதன் மூலம் துர்நாற்றமானது வீசக்கூடும் .
பெரும்பாலும்
குழந்தைகளுக்கு சிறு வயதில் காதில் சீழ் வடிதல் ஏற்படும் ,இதனை அலட்சியப்படுத்தினால் எதிர்காலத்தில் அவர்களது கேட்கும் திறனானது மங்கும் நிலை போல ,அவர்களது எதிர்கால வாழ்க்கையும் அவ்வாறாகவே அமைந்து விடும் .எனவே அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு ,ஆரம்ப நிலையிலேயே தகுந்த
சிகிச்சை மேற்கொண்டு
காது கேளாமையை தவிர்த்தல் நல்லது.