Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
symbol-of-deafness
செவிட்டுத் தன்மை (கேள்விக் குறைபாடு) என்றால் என்ன? அவற்றின் பாதிப்புகள் ?
February 20, 2021
தமிழ்நாட்டில் நவீன காது கருவிகள் கிடைக்கக்கூடிய இடங்கள் ?
February 22, 2021

காது தொற்றுகள் எங்கே ,எதனால் ஏற்படுகிறது ?

காது தொற்றானது இலகுவாக ஏற்படக்கூடிய ஒன்றாகும் .காது ,மூக்கு மற்றும் தொண்டை ஆகியவை மிக நெருக்கமாக இருப்பதால் ,இவற்றில் எதில் தொற்று ஏற்பட்டாலும் அது மற்றொன்றுக்கு மிக எளிதில் பரவக்கூடும்.இந்த மூன்று உறுப்புகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதால், ENT என்ற ஒரு தனி சிகிச்சைப்பிரிவை சுகாதார அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.

காதானது மூன்று பிரிவுகளாக உள்ளதை நாம் நன்கு அறிவோம்.காதில் ஏற்படும் தொற்றுகளை நாம் முன்காது தொற்று மற்றும் நடுக்காது தொற்று என வகைப்படுத்தலாம்.

முன்காதில் ஏற்படும் தொற்று :

முன்காதானது காதின் வெளிப்புறத்திலிருந்து ,காது சவ்வு வரை உள்ள ஒரு பகுதியாகும்.முன்காதில் ஏற்படும் தொற்று ,அரிப்பு அல்லது அழற்சியை நாம் Otitis externa என்கிறோம்.முன்காது பகுதிக்கு தொற்றானது காதின் வெளிப்புறத்திலிருந்து அதிகளவில் ஏற்படக்கூடும் .எடுத்துக்காட்டாக நாம் குளிக்கும்போது காதில் இருக்கும் நீர் அல்லது சோப்பு ஆகியவற்றை சுத்தம் செய்யாமல் விட்டுவிடுவதால் தொற்றானது ஏற்படும்.

காதின் வெளிப்பகுதியிலிருந்து காதினுள் செலுத்தும் அந்நியப்பொருள்களின் மூலம் காது தொற்றானது ஏற்படுகிறது .தொண்டை மற்றும் மூக்கு பகுதியில் ஏற்படும் தொற்றுகள் கூட காது தொற்றிற்கு காரணமாக அமையும்.

முன்காது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காதில் வலி,காதில் சீழ் வடிதல்,காது கேட்பதில் சிரமம் மற்றும் காதில் மஞ்சள் நிற திரவம் வெளியேறுதல் போன்றவை ஏற்படும்.

நடுக்காதில் ஏற்படும் தொற்று :

நடுக்காதில் ஏற்படும் தொற்றானது மிகப் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது ஆகும்.நடுக்காதில் ஏற்படும் தொற்றால் காதினுள் அழற்சியானது ஏற்படுகிறது.

நடுக்காது தொற்று உட்காதின் வழியாக சென்று நரம்பு மண்டலத்தையும் ,மூளையையும் பாதிக்கும்.இதனால் மூளைக்காய்ச்சல் ஏற்படக்கூடும்.நடுக்காது தொற்றானது காது கேளாமையை உண்டுபண்ணும்.நடுக்காது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காது கேட்பதில் சிரமமும் ,மற்றவர்களுடன் பேசுவதில் தயக்கம்,பிறர் சொல்வதை சரியாக கேட்கமுடியாமல் மறுபடியும் கூற சொல்வது ,காதில் திரவம் தேங்கி இருப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

நடுக்காது தொற்று உள்ளவர்கள் நீண்ட நேரம் நீச்சல் அடிப்பதையும் ,ஏறி குளங்களில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும்.நடுக்காது தொற்று உள்ளவர்கள் விரைவில் மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.நடுக்காது பிரச்சனைகள் தீர சில காலம் ஆகும் என்பதால் ,விரைவில் சிகிச்சை எடுப்பது நல்லது.