Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    sudden-hearing-loss
    திடீர் காது கேளாமை எதனால் ஏற்படுகிறது ?
    February 18, 2021
    insect-in-ear
    காதுக்குள் பூச்சி நுழைந்துவிட்டால் என்ன செய்வது ?
    February 19, 2021

    காது வலி எந்தெந்த காரணங்களால் ஏற்படுகிறது ?

    நமக்கு காது கேட்பதால்தான் பிறர் கூறும் வார்த்தைகள் அறியப்பட்டு ,அது மூலையில் பதியப்படுகின்றன . மூளையில் பதியப்பட்ட வார்த்தைகளை வாய் உச்சரிக்கிறது. வாய் உச்சரிப்பதினால் பேச்சு மொழி வளர்ச்சி அடைகிறது.காது நமக்கு கேட்கும் திறனை தருவதோடு நாம் நிலையாக நிற்பதற்கும் ,நடப்பதற்கும் உறுதுணையாக பல செயல்களை செய்து வருகிறது.நாம் காதிற்கு செய்யும் எதிர்மறை செயல்களால் காது பாதிப்படைவதோடு ,காது வலியும் ஏற்படுகிறது .இந்த காது வலிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன .

    காது வலிக்கான கரணங்கள்:

    1 .சிலர் பொழுபோக்கிற்காக தண்ணீரில் நீண்ட நேரம் ‌விளையாடுவதாலு‌ம், கடல் நீ‌ரில் குளிப்பதாலும் காதில் நோய்தொற்று ஏற்பட்டு ,அது நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான காது வலியை ஏற்படுத்தும்.
    2 .மூக்கின் பின் பகுதியில் இருந்து காதுப் பகுதிக்குச் செல்லுகின்ற குழாயில் அடைப்புகள் ஏற்படுவதால் ,அதில் நோய்த் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இதனால் காது வலியானது ஏற்படுகிறது .
    3 .நம் தொண்டையில் ஏற்படும் அழற்சியின் காரணமாகவும் காது வலி ஏற்படும்.
    4 .சளியும் ,மூக்கடைப்பும் ஒரே நேரத்தில் அதிகமாகும் போது,மூக்கு அடைப்பை போக்க,வேகமாக மூக்கு சீந்துவது காது வலியை உண்டாக்கும்.
    5 .சைனஸ், டான்சில் மற்றும் தாடைப் பகுதியில் உள்ள எலும்புகளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருந்தாலும் ,அது காது வலியை உண்டாக்கும்.
    6.கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகளில் தேய்மானம் மற்றும் நாக்கு, வாய்களில் புண்கள் ஏற்படுவது போன்ற காரணங்களாலும் காது வலி உண்டாகும்.
    7 .காதில் ஏற்படும் நோய்கிருமிகளின் தாக்கம் மற்றும் விளைவினாலும் கூட காது வலி உண்டாகும்.