Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
Inflammation-ear-lobe
காது மடல் வீக்கம் மற்றும் அழற்சி ?
February 18, 2021
causes-of-ear-pain
காது வலி எந்தெந்த காரணங்களால் ஏற்படுகிறது ?
February 18, 2021

திடீர் காது கேளாமை எதனால் ஏற்படுகிறது ?

நன்றாக கேட்டுக்கொண்டிருந்த காது திடீரென்று கேட்காமல் போவதற்கு ,நம் காதை முறையாக பராமரிக்க தவறியதும் ,காதில் ஏற்படும் சிறு பிரச்சனைகளை அலட்சியப்படுத்துவதுமே திடீர் காது கேளாமைக்கு ஒரு காரணமாகும்.

செல்வங்களுள் தலையாய செல்வமாக விளங்கும் காது செல்வத்தின் மதிப்பையும் ,அவசியத்தையும் சரிவர புரிந்துகொள்ளாமல் இருப்பது காது மந்தைக்கு இணையான ஒன்றாகும் .

திடீர் காது கேளாமை ஏற்படுவதற்கான காரணங்கள்?

1 .நம் காதை பேனா ,பட்ஸ்,சாவி போன்றவற்றை கொண்டு குடைவதாலும் ,காதில் அழுக்கு எடுப்பதாக நினைத்து குடைவதும் திடீர் காது கேளாமைக்கு ஒரு காரணமாகும் .
2 .நடுக்காது பகுதியில் சிலருக்கு Otosolerosis என்கிற குட்டி எலும்பு அதிராமல் இருப்பதால் காது கேளாமையானது ஏற்படும் .
3 .வயதானவர்களுக்கு உள் காதில் உள்ள நரம்பு தளர்ச்சியுறும்போது காது கேளாமையானது ஏற்படுகிறது .
4 .காதுப்பகுதியில் ஸ்டேப்ஸ் என்ற சிறிய எலும்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது காது கேளாமைக்கு சிக்கலை விளைவிக்கும் .
5 .வெளிக்காதில் ஏற்படும் அடைப்பு மற்றும் கிருமித் தொற்று ஆகியவற்றினாலும் திடீர் காது கேளாமை ஏற்படும் .