Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171
காது கேட்கும் திறன் அதிகரிக்க நாம் பின்பற்ற வேண்டியவை ?
March 1, 2021
types-of-hearing-loss
கேட்கும் இழப்பின் வகைகள் என்னென்ன ?
March 2, 2021

தற்காலிக செவிப்புலன் இழப்பு மற்றும் அவற்றிற்கான காரணங்கள் ?

தற்காலிக செவிப்புலன் இழப்பு என்பது ஒரு நாள் அல்லது சில நாட்கள் நீடிக்கும் தன்மை கொண்டது .தற்காலிக செவிப்புலன் இழப்பு காதில் ஏற்படும் தொற்று அல்லது அடைப்பு இதற்கு காரணமாக அமைகிறது .இதற்கு ஆரம்ப நிலையிலேயே தீர்வு காணாவிட்டால் ,தற்காலிக செவிப்புலன் இழப்பு நிரந்தர செவிப்புலன் இழப்பாக மாறும்.

தற்காலிக செவிப்புலன் இழப்புக்கான பொதுவான காரணங்கள் :

நடுக்காதில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் : ஓடிடிஸ் மீடியா என்பது நடுக்காது தொற்றுநோயைக் குறிக்கிறது. நடுக்கத்தில் ஏற்படும் தொற்றால் செவிப்புலன் கடுமையாக பாதிக்கக்கூடும்.இந்த பாதிப்புகள் பெரும்பாலும் ஒரு பக்கத்தில் நிகழ்கிறது, சில சமயங்களில் இரண்டு காதுகளும் பாதிக்கப்படலாம்.நடுக்காதில் ஏற்படும் தொற்றால் திரவம் வெளிப்பட்டு காதை அடைத்துக்கொள்ளும் அல்லது நடுக்காதில் திரவமானது தங்கிவிடும் .இதனால் தெளிவாக கேட்க முடியாத நிலை ஏற்படும் .

காது கால்வாய்கள்: காது கால்வாயில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் காதுக்குழாய் ஆனது காதுக்குள் கட்டமைக்கப்பட்டிருந்தால்,அவற்றை தாக்கப்பட்ட காதுகுழாய் என அழைக்கலாம் . காது குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அவை தற்காலிக செவிப்புலன் இழப்பை ஏற்படுத்தும். காதுகுழாய் அடைப்புகளை எப்போதும் மருத்துவர் உதவி கொண்டே கையாள வேண்டும்.மேலும் அந்நிய பொருட்கள் காதுக்குள் சிக்கி இருப்பது தற்காலிக செவிப்புலன் இழப்பை ஏற்படுத்தக்கூடும் .

தலை அதிர்ச்சி: நீங்கள் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக விபத்துகளை சந்திக்கும் போது,உங்கள் தலைப்பகுதியானது பாதிப்படைந்திருந்தால் அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தால்,அது தற்காலிக காது கேளாமையை ஏற்படுத்தும். தலையில் ஏற்படும் பாதிப்பு அல்லது அதிர்ச்சி போன்றவற்றை உடனடியாக சரி செய்வதற்கு ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம்.

அதிக சத்தத்தின் வெளிப்பாடு : அதிக சத்தம் அல்லது இரைச்சலின் வெளிப்பாடு சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பிற்கு வழிவகுக்கும்.மேலும் இது திடீர் சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பையும் ஏற்படுத்தும்.அதிக சத்தத்துடன் கூடிய இசை நிகழ்ச்சிகள், துப்பாக்கி நிகழ்ச்சிகள் அல்லது விளையாட்டு நிகழ்வுகளின் மூலம் இது பெரும்பாலும் நிகழ்கிறது. அதிக சத்தத்தால் தூண்டப்பட்ட செவிப்புலன் இழப்பு நேர்ந்தது என்றால், நீங்கள் அமைதியான சூழ்நிலைக்கு சென்று உங்களு காதுகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லது மருத்துவரை அணுக வேண்டும் .

T ஓட்டோடாக்ஸிக் மருந்துகள் : மலேரியா சிகிச்சைகள், லூப் டையூரிடிக்ஸ், கீமோதெரபி, ஆஸ்பிரின் மற்றும் சில வீரியம் மிக்க மருந்துகளை உட்கொள்வதன் மூலம் தற்காலிக செவிப்புலன் இழப்பு ஏற்படுகிறது .

தற்காலிக செவிப்புலன் இழப்பிற்கான அறிகுறிகள் :

*காது இரைச்சல் : தற்காலிக செவிப்புலன் இழப்பின் காரணமாக காது இரைச்சல் ஏற்படுகிறது .இதன் மூலம் உங்கள் காதுகளில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் ஒலி, முனுமுனுக்கும் சத்தம் ஆகியவை நிகழ்கிறது .இந்த விளைவாக தூக்கமின்மை ஏற்படும் மற்றும் ஓய்வெடுப்பதில் சிக்கல் ஏற்படலாம் .
*பெண்களின் பேச்சு ,குழந்தைகளின் குரல்கள் போன்றவற்றை கேட்பதில் ஏற்படும் சிரமம். மேலும் ,சில அதிர்வெண்கள் கூட கேட்க முடியாமல் போகக்கூடும் .
*பிறர் பேசும் பேச்சுக்கும் மற்றும் பின்னணி இரைச்சலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை புரிந்துக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள்.
*தலைச்சுற்றல் : உள் காது பகுதியில் உள்ள சில நுட்பமான உறுப்புகள் பாதிக்கப்படும்போது, ​​மயக்கம் அல்லது சமநிலையற்ற தன்மையானது ஏற்படும் .சில சமயங்களில் தலைச் சுற்றல் ,வாந்தி ,மயக்கம் ஏற்படக்கூடும் .