செவியின் இயக்கமுறை அல்லது காது கேட்டலின் இயக்கமுறை :
July 27, 2021காது கேட்கும் மெஷின்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் இடங்கள் ?
July 29, 2021
கோக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை முறை..
கோக்லியர் கருவி என்பது உட்புற மற்றும் வெளிப்புற பாகங்களைக் கொண்ட ஒரு சிறிய மின்னணு சாதனமாகும். இந்த சாதனமானது ஒலி உணர்வை வழங்க கேட்பதற்கு பொறுப்பான கோக்லியர் நரம்பைத் தூண்டுகிறது. கோக்லியர் கருவியைப் பொருத்தும் அறுவை சிகிச்சையானது நன்றாக கேட்க உங்களுக்கு உதவும். இருப்பினும், இது உங்கள் காது கேட்கும் திறன் இழப்பை சரிபடுத்துவதோ அல்லது குணப்படுத்துவதோ இல்லை.
கோக்லியர் கருவி பொறுத்தப்படுவதற்கான காரணங்கள் ?
*நீங்கள் உங்கள் இரண்டு காதுகளிலும் காது கேட்கும் திறனை இழந்திருக்கிறீர்கள்
*காது கேட்கும் கருவி பெரிதும் உதவாமல் இருப்பது.
*உங்களால் கேட்க முடிகிறது, ஆனால் தெளிவில்லாமல் தான் கேட்க முடிகிறது
*அறுவை சிகிச்சை ஆபத்தை அதிகரிக்கக்கூடிய வேறு எந்த உடல்நலப் பிரச்சனைகளும் உங்களுக்கு இல்லை
அறுவை சிகிச்சை முறை :
கோக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையின் போது பொதுவாக மயக்க மருந்துகள் கொடுக்கப்படும்.பின்னர் அறுவை சிகிச்சையின் போது மாஸ்டாய்டு எனப்படும் பொட்டெலும்பைத் திறக்க காதுக்கு பின்னால் ஒரு கீறல் போடப்படுகிறது.
கோக்லியாவை அணுகுவதற்கு முக நரம்பைக் கண்டறிந்து, அவற்றுக்கு இடையே ஒரு சிறிய கீறல் போடப்படுகிறது. கோக்லியா திறந்ததும், உள்வைப்பு மின்முனைகள் அதில் செருகப்படுகின்றன. ரிசீவர் (ஒரு மின்னணு சாதனம்) ஆனது காதுக்கு பின்னால் தோலின் கீழ் வைக்கப்பட்டு கீறல் போடப்பட்ட இடம் மூடப்படுகிறது.
கோக்லியா அறுவை சிகிச்சையினால் ஏற்படும் பலன்கள் ?
*வாய் அசைவைப் பார்க்காமலே நன்றாக கேட்கும் திறன்.
*தொலைபேசியில் ஒருவர் பேசுவதை நன்றாகக் கேட்க முடியும்.
*பல்வேறு அளவிலான சப்தங்களை வேறுபடுத்துகிறது.
*நன்றாக கேட்பதனால் நன்றாக பேசலாம்.