Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171
dirt-and-dust-in-ear
காதில் உள்ள குறும்பியை நீக்கலாமா?
February 11, 2021
common-problems-in-ear
காதில் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகள் என்னென்ன ?
February 11, 2021

பிறவி காது கேளாமை ஏற்படுவதற்கான காரணங்கள் ?

பிறவி காது கேளாமை:


பிறந்த குழந்தைகள் கேட்கும் முதல் சத்தமே தாயின் இதயத் துடிப்பு ஆகும் .தாய் வயிற்றில் இருக்கும் சிசுவின் கேட்கும் திறனானது ,தாய் கர்ப்பமான மூன்று மாதத்திலேயே வளர ஆரம்பிக்கிறது .

பிறவி காது கேளாமையானது நடுக்காதில் உள்ள எலும்புகள் ,பிறக்கும் குழந்தைகளுக்கு இல்லாமல் இருந்தால் பிறவி செவிடு ஏற்படும் .இதனால் உட்காதுக்கு ஒலிஅலைகளை அனுப்பமுடியாத சூழ்நிலை ஏற்படும் .

பிறந்த சில குழந்தைகளுக்கு காது மண்டல அமைப்பு சரியாக இல்லாத நிலையில் ,அவர்களுக்கு இம்பிளான்ட் ஆனது பொறுத்த முடியாது . இந்நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ,எஸ்ட்டேர்னல் அமைப்பு பொருத்தப்படும் .ஆனால் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மட்டுமே முழு பலனை அளிக்காது.அவர்களுக்கு நம் அளிக்கும் கேட்கும் திறன் பயிற்சி மட்டுமே குழந்தைகள் கேட்கவும் ,பேசவும் உதவியாக இருக்கிறது .

பிறவி காது கேளாமைக்கான காரணங்கள் :


1 .பிறவி காது கேளாமை ஆனது நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்துகொள்வது மற்றும் பரம்பரை கோளாறுகள் மூலம் ஏற்படும் .
2 .தாயின் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நோய்த் தோற்று மற்றும் சாப்பிடும் மாத்திரைகள் மூலம் குழந்தைகளுக்கு பிறவி காது கேளாமை ஏற்படுகிறது .
3 .பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மூளைக்காய்ச்சல் பிறவி காது கேளாமைக்கு ஒரு காரணமாக அமையும் .
4 .கணவன் மற்றும் மனைவி இடையே ரத்த பொருத்தம் சரியாக அமையாவிட்டாலும் பிறவி காது கேளாமை ஏற்படும் . சில சமயங்களில் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும் .