கடத்தும் காது கேளாமை மற்றும் அவற்றின் காரணங்கள் என்னென்ன ?
April 12, 2021நவீன காது கருவிகள் கிடைக்கும் இடங்கள் ?
April 21, 2021
கோவிட்-19 (Corona Virus) மற்றும் காது கேளாமை
உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையை தற்போது எதிர்நோக்கி வருகிறது.கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனாவின் முதல் அலையை காட்டிலும்,இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.இதனைத் தொடர்ந்து அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது,மேலும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், சில நோயாளிகளுக்கு ஆரம்ப அறிகுறியாக திடீர் நிரந்தர செவிப்புலன் இழப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஆடியோலஜியில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளில் 8 சதவீதம் பேருக்கு காது கேளாமை இருப்பதாக தெரிவித்துள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது அதிவேகமாக பரவி வருவதால்,அந்நோயின் அறிகுறியின் பன்முகத்தன்மையும் தெளிவாகத் தெரிகிறது.இதில் காது கேளாமை முதல் வறண்ட வாய் வரை உள்ள அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.மேலும்,சில அசாதாரண அறிகுறிகளில் கான்ஜுண்ட்டிவிடிஸ் (பிங்க் கண்), செவித்திறன் குறைதல், காது வலி மற்றும் இரைப்பை குடல் கோளாறுகள் போன்ற அறிகுறிகள் அடங்கியுள்ளன.
COVID-19 வைரஸின் புதிய அறிகுறிகளில் உடலில் வெண்படலம் , வயிற்றுப்போக்கு, உலர்ந்த நாக்கு மற்றும் தடிப்புகள் ஆகியவை அடங்கும், மேலும் இவற்றில் வேறு சில அறிகுறிகளும் அடங்கியுள்ளன.அவை காது கேளாமை மற்றும் புண் கண்கள் ஆகும்.இந்த அறிகுறிகள் கொரோனா தொற்று பாதித்த சில நோயாளிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளன..
கடந்த ஆண்டு பரவிய கொரோனாவின் அறிகுறிகளில், அதிக - குறைந்த காய்ச்சல், இருமல், சளி, சுவாச சிரமம், உடல் வலி, வாசனை மற்றும் சுவை திறன் இழப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை அடங்கும். ஆனால் வறண்ட வாய், உமிழ்நீர், இரைப்பை குடல் அறிகுறிகள் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளும் தற்போது கொரோனா நோய்த்தொற்று பாதித்தவர்கள் மூலம் பேசப்பட்டு வருகின்றன.
கொரோனாவின் புதிய பரிணாமத்தின் அறிகுறிகள் பற்றி மேலும் அறிய