Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    How-to-protect-ear
    காதை எவ்வாறு பாதுகாக்கலாம் ?
    February 16, 2021
    structure-of-ear
    காதின் அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் ?
    February 17, 2021

    காதுக்குழாய் என்பது என்ன ? காதுக்குழாயில் ஏற்படும் விளைவுகள் ?

    காதுக்குழாய் :

    தோல் மற்றும் எண்ணெய் இவை இரண்டும் சேர்ந்த கலவையே காதுக்குழாய் ஆகும் .காதில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவதற்கு காதுகளில் இருக்கும் கால்வாய் போன்ற அமைப்பு உதவுகிறது .இந்த அழுக்குகளை வெளியேற்றுவதற்கு காதில் உள்ள மெழுகுகள் துணை புரிகின்றன.

    காது ஆனது இயற்கையாகவே தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளும் திறன் கொண்டது .காதில் உள்ள மெழுகுகள்,காதிலுள்ள செவி அறையை அழுக்குகள் ,பாக்டீரியா மற்றும் தூசுகள் போன்றவற்றிடமிருந்து பாதுகாக்க காது மெழுகுகள் பயன்படுகின்றன .காதுக்குழாய்கள் இயற்கையாகவே அழுக்குகளை வெளியேற்றும் பண்பைக் கொண்டது .

    காதுக்குழாயில் ஏற்படும் எரிச்சல் :

    இயற்கையாகவே காதுகளில் இருக்கும் அபோக்ரைன் எனும் சுரப்பிகள் ,காதுகளில் ஏற்படும் அரிப்பை தடுப்பதற்கு பயன்படுகிறது .மேலும் காதுகளில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க பயன்படுகிறது .இந்த அபோக்ரைன் எனும் சுரப்பிகள் காதுக்குழாய்யில் சுரக்கின்றன .

    வெளிப்புற காது கால்வாயில் அதிக அளவு கந்தகம் சேர்வதால் ,காது அரிப்பு மற்றும் கேட்கும் திறனில் பிரச்னைகள் ஆகியவை எற்படலாம் .இதனால் ,

    *காது கால்வாய் மற்றும் காது குழாயில் சேதம்
    *தோல் நோய்கள்
    *பூஞ்சை காது தொற்றுகள்
    *வெளிப்புற அழற்சி
    போன்றவை ஏற்படுகின்றன ..