மாறாக ,ஒரு சிலர் எப்போதும் காதை குடைந்து கொண்டே இருப்பார்கள்.
காதை நீங்களே சுத்தப்படுத்தவேண்டிய அவசியமே கிடையாது. நம்முடைய உடம்பில் சேருகின்ற செக்ரியேஷன் என்கிற மிச்சங்கள்தான் வேக்ஸ் மெழுகு மாதிரியாக மாறுகிறது. இந்த மெழுகை சுத்தப்படுத்த வேண்டியதில்லை.இந்த அழுக்கானது விரைவில் காய்ந்து தானாகவே வெளியிறிவிடும் .
நம் காதிலுள்ள அழுக்கை சுத்தப்படுத்துவதாக நினைத்து காதை குடையும்போது ,அழுக்கு அல்லது மெழுகானது வெளியேறுவதற்கு பதிலாக உள்நோக்கி காதுகளின் கால்வாய்க்கு தள்ளப்படுகிறது .இதனால்
காதுகளில் அடைப்பு மற்றும்
காது வலி போன்றவைகள் ஏற்படுகின்றன .
செவித் திறனில் குறைபாடு ஏற்படவும் இது வழி வகுக்கும் .
எனவே காது குடைவதை நாம் அனைவரும் முழுமையாக தவிர்க்க வேண்டும் . காது குடைவதானால் ஏற்படும் ஆபத்தை வெளிப்படுத்தி ,பெரும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் .