1 .மூக்கு, தொண்டை, தாடையில் ஏற்படும் பாதிப்புகள் கூட காது பிரச்சனைக்கு வழி வகுக்கிறது.காது நரம்புகள் மூளைக்கு அருகில் இருப்பதால்,மூளையின் தகவல்கள் இடம்மாறி வரும் ,இதன் விளைவாக காது பாதிப்பதாக உணரப்படுகிறது .
2 .காதில் எறும்பு அல்லது
பூச்சி புகுந்துவிட்டால் உடனே காது குடையக் கூடாது.மேலும்
காது குடைவதின் மூலம் செவிப்பறை கிழிந்து
காது கேளாமையை ஏற்படுத்தும் .
3.
காதில் சீழ் வடிவது காதுகேட்கும் திறனைப் பாதிக்கும். இது ஊட்டச்சத்து குறைவு, காது மாசடைவதன் காரணமாக வரக்கூடியதாகும். இதனால் நடுக்காதில் சதை வளரும் ,இதற்கு சிகிச்சை எடுக்காவிடில் காது மொத்தமாக கேட்கும் தன்மையை இழந்துவிடும் . இந்த பாதிப்பு "கொலஸ்டியட்டோமா" எனப்படுகிறது.
4. காதில் ஈரத்தன்மை இருந்தால் தானாகவே பூஞ்சை வளர ஆரம்பித்துவிடும். இதனால்
காது அடைக்கும், சீழ் வடியும். இதன் காரணமாகவும்
காது கேட்கும் திறனானது குறையும் .
5.140 டெசிபல் அளவுக்கு மேல் உள்ள சத்தத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் கேட்கக் கூடாது. அதிக
ஒலிகள் காதை மட்டும் பாதிக்காமல் மனப்பாதிப்புகளையும் உருவாக்கும்.
6. பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால்
ஓடிடிஸ் என்ற காது வலி ஏற்பட்டு, இதன் மூலம் கேட்கும் திறனானது பாதிக்கப்படுகிறது.
7.உட்காதில் வைரஸ் தாக்கம் மற்றும்
பிறவி கோளாறுகள் ஆகியவை காது கேட்கும் திறனை பாதிக்கக்கூடும் .
8.நடுக்காதில் ஏற்படும் நோய்த் தொற்றின் காரணமாக திரவம் ஏற்பட்டு செவிப்பறையில் ஓட்டையை ஏற்படுத்தும் .இதன் விளைவாக கேட்கும் திறனானது பாதிக்கும் .
9.காதில் உள்ள ஒலி
நரம்புகள் பாதிப்படைவதாலும்,காதில் குறும்பி அதிகம் சேர்ந்து காதை அடைக்கொள்வதாலும் ,ஒலி அலைகள் காதுக்கு செல்வது தடைபட்டு காது கேட்கும் திறன் பாதிப்படையும் .
10.
மீனியர்ஸ் நோய் மற்றும் மூளையில் ஏற்படும் கட்டி ஆகியவை
காது கேளாமையை ஏற்படுத்தும் .
11.
காதில் ஒலிவாங்கியை மாட்டிக்கொண்டு சத்தமாக பாட்டுக் கேட்பதும்கூட கேட்கும் திறனைப் பாதிக்கும்.