மனிதனின் காது கேட்கும் திறனின் அளவு ?
February 20, 2021காது தொற்றுகள் எங்கே ,எதனால் ஏற்படுகிறது ?
February 20, 2021
செவிட்டுத் தன்மை (கேள்விக் குறைபாடு) என்றால் என்ன? அவற்றின் பாதிப்புகள் ?
செவிட்டுத் தன்மை அல்லது கேள்விக் குறைபாடு என்பது ஒரு பகுதியில் அல்லது முழுமையாக ஒலியை உணர்தல் அல்லது புரிந்து கொள்ளுதலில் ஏற்படும் குறைபாடே ஆகும்.கேள்வி குறைபாட்டின் தன்மையை பொருத்தே பேசும் திறனானது வேறுபடுகிறது. ஒரு நபர்
கேட்கும் ,திறனின் அளவை வைத்து அவர்களின் பேசும் திறனானது மதிப்பீடு செய்யப்படுகிறது.
கேள்விக்குறைபாடு உடையவர்களுக்கு பாதிப்பானது ஒரு காதிலோ அல்லது இரண்டு காதுகளிலுமோ ஏற்படலாம். இதில் குறிப்பாக கேட்க முடியாத நிலை
தற்காலிகமாகமானதாகவும்,நிரந்தரமானதாகவும் இருக்கக்கூடும் .இந்த குறைபாடானது
குழந்தைகளுக்கு ஏற்படும் பட்சத்தில் ,அவர்கள் பேசும் மொழியை கற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
பொதுவாக
கேட்கும் திறன் இழப்பானது
லேசான(mild) இழப்பு, மிதமான(moderate) இழப்பு, கடுமையான(severe)இழப்பு மற்றும் ஆழ்ந்த கடுமையான(profound) இழப்பு என வகைப்படுத்தலாம். இந்த மூன்று முக்கிய வகையினால் செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது.
கேள்விக்குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள்?
1 .செவிட்டுத் தன்மை ஒரு
மனிதனை தனிமைப்படுத்தவும் ,ஒரு பெரிய உடல் ஊனமுற்றவனாகவும் இருக்கச் செய்கிறது.
2 .கேள்விக்குறைபாடானது ,ஒருவர் பேசும்
ஒலியை உணர முடியாத ஒரு நிலையையும் ,அதை புரிந்துகொள்ளமுடியாத நிலையையும் ஏற்படுத்துகிறது.
3 .செவிட்டுத் தன்மையால் ஒருவரோடு உரையாடா முடியாத நிலைமை ஏற்படுகிறது.
4 .பெரும்பாலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களே கேள்விக்குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள்.
5 .கேள்விக்குறைபாடானது 15 வயதிற்கும் கீழ் உள்ள
குழந்தைகளில் 60%-க்கும் மேல் தவிர்க்க முடியாத காரணங்களால் ஏற்படுகிறது.