Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171
பட்டுக்கோட்டையில் உள்ள காது கருவி மையங்கள் ?
February 8, 2021
causes-of-deafness-in-child
குழந்தைகளுக்கு ஏற்படும் காது கேளாமைக்கான காரணங்கள் ?
February 9, 2021

செவித்திறன் இழப்பு என்றால் என்ன ?

ஒருவருக்கு ஒரு காது அல்லது இரண்டு காதுகளிலும் ,கேட்கும் திறனில் ஏற்படும் குறைபாடு செவித்திறன் இழப்பு ஆகும் .கேட்கும் திறனின் குறைப்பாடானது, காதுக்குள் இருக்கும் ரத்தக் குழாய்கள் பாதிப்படைவதாலும் ஏற்படுகிறது

செவித்திறன் இழப்பின் அறிகுறிகள் என்னென்ன ?

1 . மற்றவர்கள் சொல்வதை தவறாக புரிந்துகொள்ளுதல்.
2 .பேச்சு மற்றும் பிற ஒலிகளினால் ஏற்படும் குழப்பங்கள் .
3 .சொற்களை புரிந்துகொள்வதில் சிரமம் (கூட்டத்தில் அல்லது உரையாடலின் போது).
4 .அடிக்கடி மற்றவர்களை மிகவும் தெளிவாகவும், சத்தமாகவும் பேசச் சொல்வது.
5 .தொலைக்காட்சி அல்லது வானொலியின் அளவை அதிகரிக்கச் செய்வது .

செவித்திறன் இழப்பைத் தடுப்பது எப்படி?

செவிப்புலன் மிகவும் முக்கியமானது என்பதால், உங்கள் காது மற்றும் கேட்கும் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் , இதனால் அவை கடத்தும் செவிப்புலன் இழப்பு அல்லது பிற செவிப்புலன் இழப்பிலிருந்து தடுக்கப்படுகின்றன.

நம்முடைய காதுகள் எப்போதும் உலர்வாக இருக்க வேண்டிய பகுதியாகும். இதன் காரணமாக குளிர் காற்று, குளிர்ந்தநீர் காதுக்குள் போகக்கூடாது.ஏனெனில், இது காதின் ஆரோக்கியத்தை கெடுத்து பாதிப்பை உண்டாக்கும்.

*காதை சுத்தப்படுத்த குச்சி, பட்ஸ் போன்ற பொருட்களை உபயோகிக்க கூடாது. மேலும், விபத்தில் காதில் அடிபடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

*நாள்பட்ட சளி மற்றும் அடிக்கடி சளிப்பிடிக்க விடாமல் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

*தூங்கும் போது காதில் எறும்பு, சிறு பூச்சிகள் நுழைய வாய்ப்புள்ளது மேலும் வாகனங்களில் போகும்போது காற்றின் வேகத்தில் பூச்சிகள் காதுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது.இதனால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

*சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.இதன் காரணமாகவும் செவித்திறனில் குறைபாடு ஏற்படலாம். இதுதவிர வயதானவர்களுக்கு காதில் புற்றுநோய்க்கிருமி தொற்றும் ஏற்படலாம்.

*தொலைக்காட்சி, வானொலி அல்லது இசையை அதிக சத்தத்துடன் கேட்பதை தவிர்த்தல் வேண்டும்.

*அதிக சத்தம் நிறைந்த இடத்தில வேலை செய்யும் போது,நாம் கேட்கும் ஒலிகளைத் தடுக்க ஹெட்ஃபோன்கள், காது மஃப்ஸ் அல்லது காது செருகிகள் போன்ற காது பாதுகாப்பாளர்களைப் பயன்படுத்துதல் அவசியமாகும்.

*வருடத்திற்கு ஒரு முறையாவது அல்லது இரண்டு முறையாவது வழக்கமான செவிப்புலன் சோதனைகளைச் செய்வது நல்லது.