நரம்பு சம்பந்தமான காது கேளாமைக்கான தீர்வு ?
February 6, 2021
காது கேளாமை மற்றும் அவற்றின் பாதிப்புகள் ?
காது கேளாமை
காது கேளாமை என்பது வெளிக்காது மற்றும் உட்காதில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஆகும்.இதில்
வெளிக்காதில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்டக்டிவ் ஹியரிங் லாஸ் (Conductive Hearing Loss) என்கிறோம் .குறிப்பாக வெளிக்காதில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நம்மால் குணப்படுத்த முடியும் .ஆனால் உட்காது பாதிப்பானது
நரம்பு சம்பந்தம்பட்ட பாதிப்பாகும் .இந்த பிரச்சனையானது நிரந்தர
காது கேளாமைக்கு வழி வகுக்கும் .
1 .வெளிக்காது பாதிப்புகள் (Conductive Hearing Loss):
வெளிக்காதில் உள்ள துவாரத்தில் அடைப்பு அல்லது
நோய்த்தொற்று இருப்பது .
காது ஜவ்வில் ஓட்டை விழுவது .
காது திரையிலுள்ள சிறிய
எலும்புகளில் பாதிப்பு ஏற்படுவது .
காதில் மெழுகு அடைத்துக்கொண்டிருப்பது அல்லது சரும உறை கட்டியால் பாதிப்பு ஏற்படுவது .
மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளையும் நம் குறிப்பிட்ட சிகிச்சையின் மூலம் சரிசெய்து கொள்ளலாம் .
2 .நரம்பு சம்பந்தமான காது கேளாமை : (Sensorineural Hearing Loss)
நரம்பு சம்பந்தமான காது கேளாமை என்பது முழுக்க உள்காதில் வரக்கூடிய பிரச்சனை ஆகும் .உட்காதில் நத்தை வடிவில் உள்ள சிறு சிறு நரம்புகள் இணைந்து அவை பெரிய நரம்பாக காதுக்குள் செல்லும்போது ,அந்த நரம்புகளில் ஏற்படும் பிரச்சனையை நரம்பு தொடர்பான
காதுகேளாமை என்கிறோம்.நரம்பு சம்பந்தப்பட்ட காது கேளாமை ஏற்பட்டால், பெரும்பாலான சமயங்களில் நிரந்தரமான காது கேளாமை உண்டாக வாய்ப்பிருக்கிறது.
காது கேளாமை ஏற்படுவதற்கான காரணங்கள் :
*காது கேளாமைக்குக் காரணங்கள் மரபணுக் குறைபாடு, சுற்றுச்சூழல் மாசு இரண்டுமே காரணமாக அமைகிறது.
*சில வகை காது கேளாமைக்கு பரம்பரை குறைபாடு ஒரு காரணமாக அமையலாம். குழந்தை கருவில் உருவாகும் போது உட்புறக் காது சரியான வகையில் வளர்ச்சி அடையாமல் போவது பிறவி செவிடுக்கு ஒரு காரணமாக அமைகிறது.
*காது கேளாமை குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சில வகை நோய்களான ருபெல்லா, இன்புளூயன்சா போன்றவை தாக்கும்போது அது பிறவிக் குறைபாடாக மாறி விடுகிறது.
* விபத்துகளினால் செவிப்பறையோ அல்லது உட்புறக் காதுகளின் பாகங்களோ சேதமடையும் போது காது கேளாமை ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது.
*சிலருக்கு வயதாகும் போது செவித்திறன் குறையும். ரத்த நாள நோய்களாலும் சிலருக்கு காது கேட்காமல் போகும்.
*சத்தமான ஒலிகளை தொடர்ந்து கேட்டு கொண்டே இருத்தல், ஒரு சில மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வது, அதிக ஒலி கேட்கும் இடத்தில் வேலை பார்ப்பது போன்றவை காது கேளாமைக்கு வழி வகுக்கும்.