ஒருவரின்
கேட்கும் திறனை அறிவதற்கு அல்லது தீர்மானிப்பதற்கு செய்யப்படும் பரிசோதனையை கேட்டல் சோதனை ஆகும் .இதன்மூலம் உட்காதின் வழியாக ஒலியானது மூளைக்கு முறையாக செல்கிறதா அல்லது வழங்கப்படுகிறதா என்பதை அளவிடுவதற்கு கேட்டல் சோதனை பயன்படுகிறது .
கேட்கும் செயல்முறை எப்போது நிகழ்கிறது?
நம்மைச் சுற்றியுள்ள காற்றில் ஏற்படும் அதிர்வுகளிலிருந்து ஒலியானது வெளிப்பட்டு ,பின்பு ஒரு குறிப்பிட்ட
அதிர்வெண்ணிலிருந்து ஒலி அலைகள் உருவாகிறது .இந்த ஒலி அலைகள் காது வழியாக உட்காது பகுதிக்கு நுழைந்து நரம்பு வழியாக மூளைக்கு செல்வதால்
கேட்கும் செயல்முறை நிகழ்கிறது.
கேட்டல் சோதனைக்கான அறிகுறிகள் என்ன ?
*காதில்
தொடர் இரைச்சலை உணர்வது (டின்னிட்ஸ்)
*பொது இடங்களில் நடக்கும் உரையாடலை கேட்பதில் சிரமம்
*ஒருவரிடம் பேசும்போது ஒரு முறைக்கு இருமுறை பேச சொல்லி கேட்பது.
*அதிக சத்தத்தில் தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் இசைகளை கேட்பது
*மைக்ரோட்டியா போன்ற காதுகளில் பிறவி அசாதாரணங்கள் அல்லது
பிறவி குறைபாடுகள் இருப்பது.
*கூட்டம் நிறைந்த இடங்களிலிருந்து வரும்
ஒலிகளை கேட்பதில் ஏற்படும் சிக்கல் .