தமிழ்நாட்டில் காது கருவி மையம் அமைந்துள்ள இடங்கள் ?
February 6, 2021தஞ்சாவூரில் உள்ள சிறந்த காது கருவி மையம் எது?
February 8, 2021
பிறந்த குழந்தைகளுக்கு செவித் திறனை அறிய மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் என்ன ?
பிறந்த குழந்தைகளுக்கு கேட்கும் திறனானது சரியான நிலையில் உள்ளதா என்பதை ,குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள் பரிசோதிப்பது நல்லது .ஏனெனில் குறைபாடானது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் ,அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு ,குழந்தையின் எதிர்காலத்தை வளமாக்கலாம்.
பிறந்த குழந்தைகளுக்கு கேட்கும் திறனை கண்டறிய இரண்டு வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன .1 .O.A.E.Test 2 .ABR Test
1 .Oto Acoustic Emissions Test :
பிறந்த
குழந்தைகளுக்கு கேட்கும் திறனை கண்டறிய ஓ.ஏ.இ டெஸ்ட் பயன்படுகிறது .இந்தப் பரிசோதனையின் மூலம் குழந்தையின் காதுக்குள் ,
வெளிப்புற சத்தத்தினால் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளை ,ஒரு ஒலிவாங்கியின் மூலம் அளக்கப்பட்டு, பின்பு அந்த அளவுகள் ஒரு கணினிக்குள் அனுப்பப்பட்டு குழந்தையின்
கேட்கும் திறனானது கண்டறியப்படுகிறது .
2 .Auditory Brainstem Response test :
இந்தப் பரிசோதனையானது ஆறு மாதத்திற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு செய்யப்படும் சோதனையாகும் .இந்த சோதனையின் மூலம் மெல்லிய சத்தங்களைக் கொண்டு
கேட்கும் திறன் கண்டறியப்படுகிறது . அதாவது குழந்தையின் காதுக்குள் ,ஒரு சிறிய செவிப்பொறி மூலம் மெல்லிய அல்லது சொடுக்கு சத்தங்கள் செலுத்தப்படுகின்றன . இதன் மூலம் குழந்தையின்
கேட்கும் திறனானது கண்டறியப்படுகிறது .