காக்ளியர் உள்வைப்பு(காக்ளியர் இம்பிளான்ட்) எவ்வாறு செயல்படுகிறது?
காக்ளியர் உள்வைப்பின் மூலம் வெளிப்புறத்தில் உள்ள ஒலிகளையும் ,பேச்சையும் மைக்ரோஃபோன் எடுத்து அவற்றை
ஆடியோ செயலிக்கு அனுப்புகிறது.
பின்னர் காக்ளியர் உள்வைப்பின் ஆடியோ செயலியானது மைக்ரோஃபோனிடமிருந்து பெற்ற ஒலிகளையும் ,பேச்சையும் பலவீனமான மின் தூண்டுதல்களின் வரிசையாக மாற்றுகிறது .
பின்பு அவற்றை ஒரு டிரான்ஸ்மிட்டர்(Transmitter) மற்றும் ரிசீவரின் உதவியோடு (Receiver) கீழ் காக்லியாவில் உள்ள மின்முனைகளுக்கு அனுப்பி வைக்கிறது. இந்த மின் தூண்டுதல்கள்
செவிப்புல நரம்பைத் தூண்டுகின்றன.மூளையின் செவிவழி மையங்கள் மூலமாக தூண்டுதல்கள் பேச்சு மற்றும் ஒலிகளை உணரவைக்கின்றன .
காக்ளியர் உள்வைப்பின் வெவ்வேறு பகுதிகள் என்ன?
காக்ளியர் அமைப்பானது இரு பகுதிகளைக் கொண்டுள்ளது .வெளிப்புற அமைப்பு மற்றும் உட்புற அமைப்பு .
வெளிப்புற அமைப்பு :
இது காதுக்கு மேல் கொக்கி போன்ற அமைப்பை கொண்டு பொருத்தப்படுகிறது .
மைக்ரோஃபோன்- இது வெளிப்புற சூழலிலிருந்து ஒலியை எடுக்க உதவுகிறது.பின்னர் எடுத்த ஒளியை ஒழுங்குபடுத்துவதற்காக,பேச்சு செயலி மைக்ரோஃபோன் பயன்படுகிறது .
டிரான்ஸ்மிட்டர்- இது பேச்சு மைக்ரோபோனிலிருந்து சமிக்ஞைகளைப் பெற்று அவற்றை மின் தூண்டுதல்களாக மாற்றுகிறது.
உட்புற அமைப்பு :
இது அறுவை சிகிச்சை மூலம் உட்காதில் பொறுத்தக்கூடிய ஒரு அமைப்பாகும் .
ரிசீவர்- ரிசீவர் டிரான்ஸ்மிட்டரிலிருந்து சிக்னல்களை சேகரித்து அவற்றை மின் பகுப்புகளாக மாற்றி அவற்றை மின்முனைகளுக்கு அனுப்புகிறது.
எலக்ட்ரோடு வரிசைகள் - இது மின்முனைகளின் ஒரு குழு, அவை தூண்டுதல்களைச் சேகரித்து அவற்றை செவிப்புல நரம்புக்கு அனுப்புகின்றன.