Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171
காது கேட்கும் கருவி வாங்க சிறந்த இடம் எது ?
July 2, 2021
arunhearing-aid-centre-in-thanjavore
தஞ்சை அருண் காது கருவி நிலையம் (Arun HearingAid Center)..
July 24, 2021

காது கேட்கும் கருவி எவ்வாறு வேலை செய்கிறது ?

காது கேட்கும் கருவியானது கருவியானது வெளிக்கருவி, உட்கருவி என இரண்டு பகுதிகளாக உள்ளது.

*காது வெளிக்கருவி காதுக்குப் பின்புறம் வெளியில் தெரிவதுபோல் பொருத்தப்படுகிறது. இதில் நுண் ஒலிவாங்கி (மைக்ரோபோன்), ஒலிபெருக்கி, ஒலியை உள்ளே அனுப்பும் அமைப்பு, மின்கலன் ஆகியவை அடங்கியுள்ளன.
*காது வெளிக்கருவியின் நுண் ஒலிவாங்கியானது வெளிப்புறத்திலிருந்து வரும் ஒலியைக் கிரகிக்கிறது. பின்னர் ஒலிபெருக்கியானது ஒலியின் அதிர்வுகளை அதிகப்படுத்தி அதனை டிஜிட்டல் குறிகைகளாக மாற்றுகிறது.
*இந்த டிஜிட்டல் குறிகைகளை இதில் உள்ள ஓர் அலைபரப்புக் கருவியானது (Transmitter) காதின் உட்கருவிக்கு அனுப்பிவைக்கிறது. உட்கருவியில் ஒலிவாங்கி, ஸ்டுமுலேட்டர் (Stimulator), காந்தம் ஆகியவை அடங்கியுள்ளன.
*இதை அறுவை சிகிச்சையினால் காதின் பின்புறம் தோலுக்கு அடியில் பொருத்தி, தையல் போடப்பட்டுவிடுகிறது.கம்பிபோல் இருக்கும் ஸ்டுமுலேட்டர் உட்காதில் உள்ள நத்தை எலும்பில் (Cochlea) பொருத்தப்படுகிறது.
*அலைபரப்பி மூலம் வரும் ஒலிகளை, ஒலிவாங்கி கவர்ந்து ஸ்டுமுலேட்டருக்கு அனுப்பிவைக்கிறது.பிறகு, ஸ்டுமுலேட்டரானது டிஜிட்டல் குறிகைகளை மின்குறிகைகளாக மாற்றி, செவி நரம்பு வழியாக மூளைக்கு அனுப்புகிறது.அங்கே ஒலிகள் பகுக்கப்பட்டு கேட்கும் திறன் செயலுக்கு வருகிறது.