காதை எப்படி பராமரிக்கலாம் ?
1.
காது வலி,
காது அடைப்பு, அல்லது காதிலிருந்து திரவம் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது தலைக்கு குளிப்பது, நீர்நிலைகளில் நீராடுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
2.
காதில் பட்ஸ் ,குச்சி போன்ற பொருட்கள் நுழைப்பதை தவிர்த்தல் நல்லது .மேலும் காதில் எண்ணெய் விடுவதும்,தானாகவே
காதை சுத்தம் செய்வதையும் தவிர்த்தல் நல்லது .
3.
காதில் உள்ள குருத்தெலும்பு பகுதியில் காது குத்தினால் நோய் தொற்று ஏற்படுவதோடு காது பாதிப்படைவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.எனவே ,காது குத்தும் போது மென்மையான காது மடலில் மட்டுமே குத்த வேண்டும்.
4.
பிறந்த குழந்தைகள் மூன்று மாதத்தில் இருந்து ஒரு வயது வரை சத்தம் செய்தால் திரும்பிப் பார்க்காமலோ ,பேச ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ உடனே காது,மூக்கு,தொண்டை மருத்துவரை அணுகுதல் நல்லது.
5.
காதுக்குள் பூச்சி ஏதேனும் புகுந்து விட்டால் உப்பு நீரைக்
காதில் விடுவதுதான் உடனடி முதல் உதவியாகும்.
6. தொடர்ந்து சத்தம் கேட்கும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் காதுக்கு மாஸ்க் அல்லது காது அடைப்பானை பயன்படுத்துவது நல்லது.குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் மருத்துவரை அணுகி காது
பரிசோதனையை மேற்கொள்வது நல்லது .
7. சளி பிடித்திருக்கும்போது மூக்கைச் மிகப்பலமாக சீந்துவதை தவிர்க்க வேண்டும் . இவ்வாறு செய்தால் காதுக்கு வரும் ஆபத்தை எளிதில் தவிர்க்கலாம் .
8 .
காது கேட்கும் திறன் குறைந்து போனால் ஆரம்பத்திலேயே ஒலிக் கருவியை பொருத்துவதன் மூலம் இயல்பான பேசும் திறன் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.
9 .பரம்பரையாக
காதுகேளாதோர் வழிவந்த குழந்தைகள்,நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள்,பிறந்த உடனேயே மஞ்சள் காமாலை மற்றும் மூளைக் காய்ச்சலால் தாக்கப்படும் குழந்தைகள் போன்ற காரணங்களால்
காது கேளாமை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.இதற்கு உடனடியாக காது மருத்துவர்களை அணுகி பிறவியிலேயே
காது கேளாமைக்கு தீர்வு காண்பது நல்லது.