Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171

    Book a Free hearing aid test and Trial

    செவியை பாதுகாக்க நாம் செய்யக்கூடியதும் ,செய்யக்கூடாததும் ?
    February 17, 2021
    Inflammation-ear-lobe
    காது மடல் வீக்கம் மற்றும் அழற்சி ?
    February 18, 2021

    காது அடைப்பு எதனால் ஏற்படுகிறது ?காது அடைப்பை எப்படி சரிசெய்வது ?

    காது அடைப்பு :

    மனிதனின் காதுப் பகுதியானது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம் ,அவை வெளிக்காது ,நடுக்காது மற்றும் உட்காது. காதுகளில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுவதை நம் காண்கிறோம் ,இதில் காது அடைப்பு என்பது மிக முக்கிய பிரச்னையாக இருக்கிறது .

    பொதுவாக காது அடைப்பு பல காரணங்களால் ஏற்படுகிறது.

    1 .காது அடைப்பானது ,காது சவ்வில் நீர் கோர்த்துக்கொள்வதாலும் ,சளி சேர்வதாலும் ஏற்படுகிறது .
    2 .சில சமயங்களில் காதில் சேரும் மெழுகினாலும் காது அடைப்பு ஏற்படுகிறது .காதுக்குள் சுரக்கும் அதிகமான மெழுகுகள் ,காதிற்குள் செல்லும் குழாயில் அடைத்துக்கொண்டு ஒலி அலைகள் செல்வதை தடுக்கும் .இதனால் பாதி காதுதான் நமக்கு கேட்கும் .
    3 .சளி தொல்லையால் பாதிப்படுபவர்கள் வேகமாக தும்முவதன் மூலமும் காது அடைப்பு ஏற்படுகிறது .
    4 .செவிக்கால்வாயில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுகள் ,சைனஸ் பிரச்சனை ,வீக்கமடைதல்,சதை வளர்ச்சி போன்றவற்றாலும் காது அடைப்பு ஏற்படுகிறது ,இது சில சமயங்களில் காது இரைச்சலை உண்டாக்கும் .
    5 .காது அடைப்பை எளிதாக எண்ணி விட்டுவிட்டால் ,காதில் புகும் நீர் மற்றும் சளியால், சீழ் பிடித்து மூளைக்கு செல்லும் நரம்பில் நோய்த் தொற்று ஏற்பட்டு மூளைகாய்ச்சலை உண்டாக்கும்.

    காது அடைப்பை போக்குவது எப்படி ?

    1 .காதை எப்போதும் சுத்தமாகவும் ,உலர்நிலையிலும் வைத்திருக்க வேண்டும் .
    2 .காதிற்குள் அசுத்த நீர் புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .
    3 .குளிர்ந்த காற்று காதுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் .ஈரப்பதம் நிறைந்த இடத்திற்கு செல்லும்போது காதை பஞ்சு அல்லது காது அடைப்பான்களை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும் .
    4 .காதினுள் அதிக மெழுகு சேர்ந்துள்ளதா என்பதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிசோதித்துக்கொள்வது நல்லது .
    5 . காதினுள் கூர்மையான பொருட்கள் ,காகிதம் மற்றும் விரல் ஆகியவற்றை கொண்டு சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் .


    காதில் நோய் தொற்று ஏற்படுவதற்கான அறிகுறியே காது அடைப்பு எனலாம் .காது அடைப்பை அலட்சியப்படுத்தினால் ,அது நிரந்தர காது கேளாமைக்கு வழிவகுக்கும் .