Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171
ear-piercing
காதை குடையலாமா ?
February 16, 2021
ear-itching-and-irritation
காதுக்குழாய் என்பது என்ன ? காதுக்குழாயில் ஏற்படும் விளைவுகள் ?
February 16, 2021

காதை எவ்வாறு பாதுகாக்கலாம் ?

காதுகள் மனித உடலில் முக்கிய உறுப்பாக செயல்பட்டு வருகிறது .காதுகள் மனிதர்களுக்கு கேட்கும் திறனை அளிப்பதோடு ,அதனையும் தாண்டி பல சிறப்பு செய்லகளையும் செய்து வருகிறது .

காதுகள் தான் உடலின் சமநிலையை கட்டுப்படுத்தி பாதுகாத்து, உடலின் சமநிலை மாறுபடும்போது, தள்ளாட்டம், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஆகியவை வராமல் தடுக்க உதவுகிறது . நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடப்பதற்கும் காதுகள் மிக அவசியமாகிறது.

எனவே இத்தகைய சிறப்பம்சங்கள் பொருந்திய காதை எவ்வாறு பராமரிக்கலாம் ,எப்படி பாதுகாக்கலாம் என்பதை கீழ் கண்ட வரிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .
1 . காதுக்குள் குச்சி, பேணா,பென்சில் ,வண்டி சாவி ,பட்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காது சுத்தம் செய்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும் .ஏனென்றால் காதுக்குள் இருக்கும் வாக்ஸ் என்ற திரவமானது காதிலுள்ள அழுக்குகளை தானாகவே வெளியேற்றி விடும் .எனவே காதை சுத்தம் செய்வதை அறவே ஒழித்திடல் வேண்டும் .

2 .சைனஸ், டான்சில், தாடை போன்ற எலும்புகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலும் காதானது பாதிக்கும், எனவே மேற்கண்ட எலும்புகள் பாதிப்பு அடையாமல் பாதுகாப்பது மிக அவசியமாகும் .

3 .அதிக சத்தம் இல்லாமல், மெல்லிய இசையை மட்டுமே கேட்பதால் காது பாதிப்படைவதை தவிர்க்கலாம் .

4 .தொடர்ந்து செல்போனில் பேச நேரிட்டாலும், ஒரு காதிலிருந்து மற்றொரு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது.

5 .காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிபவர்கள் மிகக் குறைந்த அளவு சத்தத்தை கேட்பதன் மூலம் காது பாதிப்படைவதை தவிர்க்கலாம் .

6 .சுற்று வட்டாரத்தில் அதிக இரைச்சல் இருப்பது தெரிந்தால், காதில் பஞ்சு அல்லது காது அடைப்பான்களை பயன்படுத்தி காதை அடைத்துக் கொள்ளலாம் .

7 .காதில் பூச்சி புகுந்துவிட்டால், எண்ணெய் சில சொட்டு விடலாம். பூச்சி செத்து வெளியே வந்துவிடும்.இல்லையென்றால் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை முறையை மேற்கொள்ளவேண்டும் .

8 .காதில் அடிக்கடி டிராப்ஸ்(காது மருந்துகள்) போடக் கூடாது. இதனால் நோய் தொற்று, அரிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது .காது மருந்துகள் காது மருத்துவரின் ஆலோசனைப்பெற்று பயன்படுத்த வேண்டும் .

9 .மிக முக்கியமாக காது, மூக்கில் நுழையும் படியாகவும், வாயில் போட்டு விழுங்கும் படியாகவும் உள்ள பொருட்களை குழந்தைகள் எடுக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம் .

10 .80 முதல் 85 டெசிபல் வரை தான் நம் காதுக்கு சத்தத்தை தாங்கும் அளவிற்கு சக்தி உண்டு.மேலும் அதிக சத்தத்தை கேட்பதனால் காதின் சவ்வு கிழிந்து காது கேளாமை ஏற்படுகிறது .எனவே அதிக அளவு சத்தம் கேட்பதை தவிர்த்தல் நல்லது .

11 .குளிர்காலங்களில் குளிர்ந்த காற்றானது காதுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்வது மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது ஆகியவை காதுக்கு நன்மையை உண்டாக்கும் .

12 .இயர்போன் பயன்படுத்துபவர்கள், அதிக இரைச்சல் கொண்ட பகுதிகளில் வேலை செய்பவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை காது பரிசோதனை மேற்கொள்வது நல்லது.