Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171
causes-of-ear-pain
காது வலி எந்தெந்த காரணங்களால் ஏற்படுகிறது ?
February 18, 2021
otitis-media-in-ear
இடைச்செவி அழற்சி என்றால் என்ன ?அதன் அறிகுறிகள் ?
February 19, 2021

காதுக்குள் பூச்சி நுழைந்துவிட்டால் என்ன செய்வது ?

பொதுவாக நம்முடைய காது மிகவும் மென்மையான ஒரு உறுப்பு ஆகும் . காது பகுதியில் நுண்ணிய துளை கொண்ட நுழைவு இருப்பதால் எந்தவொரு பூச்சி அல்லது பொருள் நுழைந்தாலும் அதை எடுப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு காரியமாகும்.

நம் காதுக்குள் சில சமயம் எதிர்பாராத விதமாக பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிடும்.அந்நேரங்களில் நமக்கு பதற்றமும் கவலையும் நம்மைத் சூழ்ந்துக் கொள்ளும்.பூச்சானது நம் காதிற்குள் சென்றவுடன் பூச்சியின் நிலைமை ஒரு பெரும் திண்டாட்டத்தையும் ,அதனால் பாதிக்கப்படுபவரின் நிலைமை வேதனையின் உச்சத்தையும் அடைந்து விடும்.பெரும்பாலும் இந்நிகழ்வானது தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நிகழ்ந்து விடுகிறது.

காதினுள் பூச்சி செல்வதால் ஏற்படும் விளைவுகள் ?

1 .நம் காதிற்குள் பூச்சி நுழைந்தவுடன் ஒரு விதமான இரைச்சலை எழுப்பச் செய்யும் . இதனால் மிகவும் அசௌகரியமான சூழல் ஏற்படும்.
2 .காதினுள் உள்ளே சென்ற பூச்சி இறக்காமல் ,அங்கும் இங்கும் சுற்றித் திரியும் நிலை ஏற்படும்.
3 .சில சமயம் காதிற்குள் சென்ற பூச்சி இறந்து விட அதிக வாய்ப்பு உள்ளது.
4 .பூச்சி காதில் நுழைந்தவுடன் காதினுள் ஏதோ நிறைந்து இருக்கிற மாதிரியான உணர்வு ஏற்படும்.
5 .சில சமயங்களில் காதினுள் நுழைந்த பூச்சானது செவி அறையைச் சுற்றி உள்ள கிரானியல் நரம்புகளை தொந்தரவு செய்யக்கூடும்.
6 .காதினுள் வலி ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு.

காதினுள் நுழைந்த பூச்சியை வெளியேற்றுவது எப்படி ?

*காதினுள் பூச்சி உயிரோடு இருக்கும் பட்சத்தில் மிகவும் சிறிதளவு தேங்காய் எண்ணையை காதில் ஊற்றுவதால் ,பூச்சி இறந்துவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு .

*காதினுள் சென்ற பூச்சியை எடுக்க ,சிறிது உப்பு கரைசலை கொண்டு காதில் ஊற்றுவதன்மூலம் ,பூச்சியின் மூச்சு தடைப்பட்டு பூச்சி இறந்து வெளியே வந்துவிடும் .

*சில நேரங்களில் எந்தப்பக்க காதினுள் பூச்சி நுழைந்துள்ளதோ அந்தப் பக்க தலையைச் சாய்த்து உலுக்கினால்,ஒருவேளை பூச்சி வெளியே வர வாய்ப்பு உள்ளது.

*குழந்தைகளின் காதில் புகுந்த பூச்சியை எடுக்க வீட்டில் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காத போது உடனே மருத்துவரை அணுக வேண்டியது நல்லது.

காதினுள் பூச்சி நுழைந்தால் நாம் செய்யக்கூடாதவை?

*மெல்லிய கம்பிகளைக் காதினுள் நுழைக்கவே கூடாது.ஏனெனில் பூச்சானது செவி அறையைத் தாண்டி சென்று விடும். இதனால் நிறைய பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
*காது குடையும் இயர் பட்ஸ்களைப் பயன்படுத்தவே கூடாது.
*தலை மற்றும் காது பகுதிகளைத் தாக்குவதோ, அடிப்பதோ கூடவே கூடாது.