மன்னார்குடி அருகில் உள்ள காது கருவி நிலையம் எது ?
March 11, 2021வெளிப்புற காதுகளில் ஏற்படும் நோய்கள் என்னென்ன?
March 12, 2021
காதில் ஏற்படும் நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் காரணங்கள்?
உலகில் பிறக்கும் 1000
குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு
பிறவியிலேயே காது கேளாத குறைபாடு உள்ளது என்பதை ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது .இவற்றில் இந்தியாவை பொறுத்தவரை 1000 பேரில் 2 பேர் என்பதும், தமிழகத்தைப் பொறுத்தவரை 1000 பேரில் 6 பேர் எனவும் இருக்கிறது.
நோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் :
காதில் ஏற்படும் பாதிப்பை வைத்து காது நோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் அமைகிறது.இவற்றில் பல்வேறு நோயின் தாக்கங்களால் காதில் பாதிப்பு உண்டாகிறது.
*காது பகுதியில் சிவத்தல் மற்றும் வீக்கம்
*உடல் சமநிலை இழத்தல்
*
காது இரைச்சல் (காதில் தொடர் ஒலி)
*
காதிலிருந்து திரவம் வெளியேறுதல்
*தலைச்சுற்றல் மற்றும் வாந்தி
*காதில் கடுமையான வலி
*
காது கேளாமை ஏற்படுதல்
காதில் நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் :
*அதிக சத்தம் மற்றும் வயது முதிர்வின் காரணமாக செவிப்பறை பாதிப்படைதல்.
*
காதுகளில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று.
*காதினுள் இருக்கும் கால்சியம் படிகங்களின் இயக்கம் காரணமாக ஏற்படும் சமநிலை இழப்பு .
*காற்று அல்லது நீரினால் ஏற்படும் திடீர் மாற்றம் (அழுத்தத்தின் காரணமாக)
*ஒரு சில மருந்துப்பொருட்களை உட்கொள்வதன் காரணமாக ஏற்படும் பாதிப்பு.