காதுகளில் ஏற்படும் நோய்களுள் மிக முக்கியமானது மீனியர்ஸ் நோய் ஆகும் .மீனியர்ஸ் நோய் என்பது
காது கேளாமை ,
காது இரைச்சல் ,மயக்கம் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையே மீனியர்ஸ் நோய்.மீனியர்ஸ் நோயானது உட்காதில் ஏற்படக்கூடிய பிரச்சனையாகும் .இது மீனியர்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு மீனியர்ஸ் நோய் என பெயர் வைக்கப்பட்டது .
மீனியர்ஸ் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் ?
1 .நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் ,வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் ஏற்படக்கூடியது.
2 .உடலில் அதிக அளவு சோடியம் உப்பு சேர்த்துக்கொள்வதாலும் இந்நோய் ஏற்படுகிறது .
3 .ரத்த நாளமில்லா சுரப்பிகள் மற்றும் ஒவ்வாமையின் காரணமாகவும் இந்நோய் ஏற்படுகிறது .
4 .பெண்களுக்கு மாத விலக்கு மாறுதலும் இந்நோய்க்கு ஒரு காரணமாக அமைகிறது.
5 .
மனிதரின் உணர்ச்சியானது மீனியர்ஸ் நோய்க்கு மிக முக்கிய காரணமாகவும் ,முதற்காரணமாகவும் அமைகிறது .