என்.ஐ.எச்.எல் (NIHL - Noise-induced hearing loss ) எனப்படும் சத்தம் தூண்டப்பட்ட காது கேளாமையானது, உள் காதில் உள்ள முக்கியமான கட்டமைப்புகளை ஒலிகள் சேதப்படுத்தும்போது ,தூண்டப்பட்ட காது கேளாமை ஏற்படுகிறது .
பொதுவாக ,நம் ஒரு சில வகையான ஒலிகளை நாளுக்குநாள் கேட்டுக்கொண்டிருக்கிறோம் .அதாவது ,தொலைக்காட்சி மற்றும் வானொலியில் இருந்து வரும்
ஒலிகள், வீட்டு உபகரணங்கள் மற்றும் வாகனங்களிலிருந்து வரும் ஒலிகள் ஆகியவை இவற்றில் அடங்கும் .இந்த வகை ஒலிகள் பாதுகாப்பான அளவில் உள்ளதால் , அவை நம் செவிப்புலனை சேதப்படுத்தாது.
என்ஐஎச்எல் (NIHL) பாதிப்பானது நமக்கு
திடீரென ஏற்படலாம் அல்லது அதனை கண்டறிவதற்கு நீண்ட நேரம் கூட ஆகலாம். என்ஐஎச்எல் (NIHL) பாதிப்பானது
தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம், மேலும் இது ஒரு காது அல்லது இரு காதுகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது .