Welcome To Arun Hearing Aid

  • +91 85250 43414
  • +91 94432 43171
otitis-media-in-ear
இடைச்செவி அழற்சி என்றால் என்ன ?அதன் அறிகுறிகள் ?
February 19, 2021
causes-of-hearing-loss
காதுகேட்கும் திறன் இழப்பு மற்றும் அவற்றிற்கான காரணங்கள்?
February 20, 2021

ஒரு பக்க நிரந்தர செவித் திறன் இழப்பு என்பது என்ன ?

ஒரு பக்க நிரந்தர செவித் திறன் இழப்பு என்பது ஒரு பக்க காதில் ஏற்படும் நிரந்தர இழப்பு ஆகும் .இது காதின் ஒரு பக்கத்தில் சிறிதளவான மற்றும் முற்றிலுமான செவித்திறன் இழப்பை குறிக்கும் .

ஒரு பக்க நிரந்தர செவித் திறன் இழப்பிற்கான காரணங்கள்?

1 .ஒரு பக்க நிரந்தர செவித் திறன் இழப்பு ஆனது தாயின் கர்ப்பகாலத்தில் ஏற்படுகின்ற சில பிரச்சனைகள் மூலம் ஏற்படுகிறது .
2 .ஒரு சில குழந்தைகள் மரபு வழி அல்லது பரம்பரை குறைபாடுகள் மூலம் பிறப்பிலேயே பாதிக்கப்படுவதால் ஒரு பக்க நிரந்தர செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது.
3 .புட்டாளம்மை மற்றும் மெஞ்சைட்டிஸ் போன்ற நோய் குறைபாடுகளாலும் செவித்திறன் இழப்பு ஏற்படுகிறது .
4 . ஒரு சில நேரங்களில் இந்த இழப்பிற்கான காரணங்கள் என்ன என்பதை அறிய முடியாத நிலை ஏற்படுகிறது.எனவே ,இதனை ஆரம்ப நிலையிலேயே சரிசெய்வது நல்லது.

ஒரு பக்க நிரந்தர செவித் திறன் இழப்பின் விளைவுகள் ?

1 .ஒரு சில குழந்தைகளுக்கு செவித்திறன் இழப்பு காரணமாக பேச்சு வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுதல் .
2 .பாதிக்கப்பட்ட காது பகுதியிலிருந்து வரும் சத்தத்தை அறிதல் .
3 .சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதில் ஏற்படும் குழப்பம் .
4 .சத்தமான சூழ்நிலைகளில் காது கேட்கும் திறனின் இழப்பு .