நடுச்செவிக்கும், தொண்டைக்கும் பாலமாக அமையும் "ஈஸ்ட்டேசியன் குழாய்" மூலமாக சளி கிருமியோ அல்லது சளியோடு சேர்ந்து அழற்சியோ தொண்டையிலிருந்து நடுச்செவியை அடையும். அங்கே
அழற்சியால் நீர்க் கோர்வை ஏற்பட்டு அதிர்வலைகள் தடைபடுவதால்
காது மந்தம் ஏற்படுகின்றது.
இது இயல்பாக நமது தொண்டையில் அமைந்திருக்கும் டான்சில் சதையும், அடினாய்டு சதையும் நாள்பட்ட அழற்சியால் தாக்கப்பட்டாலும், நடுச் செவி நீர்க்கோர்வை ஏற்பட்டு காது மந்தம் ஏற்படும். இந்த பிரச்சினைகள் உள்ள
குழந்தைகள் படிப்பிலும் மந்தமாகவே இருக்கக் கூடும்.
பொதுவாக ,பனிகாலத்தில் மூக்கடைப்பு ஏற்படுவது சகஜம். குழந்தைகளுக்கு மூக்கடைப்பு நீடிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஏனெனில், தொண்டைக்கும் காதுக்கும் இடையில் உள்ள காது தொண்டை இணைப்புக் குழாய் அடைபட்டு
காது வலியை ஏற்படுத்தும். இந்த காதுவலி ஆனது இரவு நேரத்தில் அதிகத் தொல்லையைக் கொடுக்கக் கூடியது .