இயற்கையாகவே நாம் காது பகுதிக்குள் வாக்ஸ் எனும் திரவமானது சுரந்து கொண்டிருக்கிறது .
காதிலுள்ள அழுக்குகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செல்லும்போது ,தானாகவே வெளியே வந்துவிடுகிறது ,இதற்கு காரணமாக இருப்பது நம் காதில் சுரக்கும் வாக்ஸ் திரவமாகும் .எனவே குச்சி ,பேனா போன்ற கூர்மையான ஆயுதங்களை கொண்டு காதிலுள்ள அழுக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுவாக
காதில் அழுக்கு சேர்வது ,காது அரிப்பு ,குறும்பி சேர்வது ,காது அடிக்கடி அடித்துக்கொள்வது மற்றும்
காதில் சீழ் வருவது போன்ற பிரச்சனைகள் இருந்தால் விரைவில் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பின்பு காது சொட்டு மருந்துகளை பயன்படுத்தலாம் .