ரின்னே சோதனை செய்வது எப்படி?
*ரின்னே சோதனையின் போது மருத்துவர் ஒரு இசைக்கவை(tuning fork) தாக்கியை , ஒரு
காதுக்கு பின்னால் உள்ள மாஸ்டாய்டு எலும்பில் வைக்கிறார்.
*இதன் மூலம் நீங்கள்
ஒலியைக் கேட்க முடியாதபோது, மருத்துவரிடம் சமிக்ஞை(signal) ஒன்றை செய்கிறீர்கள்.
*பின்னர், மருத்துவர் உங்கள் காது கால்வாய்க்கு அருகில் ட்யூனிங் ஃபோர்க்கை நகர்த்துகிறார்.
*இந்த ஒலியை நீங்கள் உணராத அல்லது கேட்காத பட்சத்தில் ,மீண்டும் மருத்துவரிடம் சமிக்ஞை ஒன்றை செய்கிறீர்கள்.
*இவ்வாறு நீங்கள்
கேட்கும் ஒலியின் நேரத்தை மருத்துவர் பதிவு செய்கிறார்.
ரின்னே சோதனையின் முடிவுகள்?
*ரின்னே சோதனையின் பிறகு உங்களுக்கு
கடத்தும் செவிப்புலன் இழப்பு இருந்தால், எலும்பு கடத்துதலானது காற்று கடத்தல் ஒலியை விட நீண்ட நேரம் கேட்கப்படுகிறது.
*சோதனையின் போது உங்களுக்கு
சென்சார்நியூரல் செவிப்புலன் இழப்பு இருந்தால்,எலும்பு கடத்துதலை விட காற்று கடத்தலானது நீண்ட நேரம் கேட்கப்படுகிறது.
*ரின்னே சோதனையின் முடிவில் ,இயல்பான செவிப்புலன் எலும்பு கடத்தும் நேரத்தை விட இரண்டு மடங்கு நீளமுள்ள காற்று கடத்தும் நேரத்தைக் காண்பிக்கிறது.
ரின்னே சோதனைகள் தீங்கு விளைவிக்காதவை மற்றும் எந்தவொரு வலியையும் ஏற்படுத்தாது.ரின்னே சோதனையின் மூலம் பெறப்படும் தகவல்கள் ,கேட்கக்கூடிய இழப்பு வகையை துல்லியமாக தீர்மானிக்க உதவுகிறது.