6. சைனஸ், டான்சில் போன்றவற்றுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
7. காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகவும்
குறைந்த அளவில் ஒலியை வைத்துக் கேட்க வேண்டும்.
8 சுற்றுவட்டாரத்தில் அதிக
இரைச்சல் இருந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ள வேண்டும்.
9. தொடர்ந்து செல்போனில் பேச நேரும்போது ஒரு
காதிலிருந்து மற்றொரு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது
10. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
11. தினமும் தியானம்,உடற்பயற்சி செய்வது காது இரைச்சலைத் தடுக்க உதவும்.
12. மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை
காதின் நலனைப் பாதிக்கும் தன்மை கொண்டது.எனவே இதனை தவிர்த்தல் நல்லது.
13.விமான நிலையம், ஜெனரேட்டர் தொழிற்சாலைகள் போன்ற அதிக சத்தம் நிறைந்த இடங்களில் வேலை செய்பவர்களுக்குக் காது கேட்காமல் போகும் வாய்ப்பு அதிகம். இதனைத் தடுக்க
காதில் பஞ்சை வைத்துக் கொள்ளலாம் அல்லது `இயர் பிளக்’ (Ear Plug) பொருத்திக்கொள்ளலாம். `இயர் மஃப்’ (Ear Muff) அணிந்து கொள்ளலாம்.